நாங்க போயஸ் கார்டனில் வீடு கட்ட வரலை.. "அவங்களைதான்" விஜய் டார்கெட் செய்வார்.. போட்டுடைத்த நிர்வாகி
சென்னை: நடிகர் விஜயின் அரசியல் எப்படி இருக்கும் என்று தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விஜயின் அரசியல் வருகை தொடர்பாக தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ராம் குமார் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்., தமிழ்நாட்டில் அதிமுக - திமுக என்று மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள். ஒருவர் வந்தால் கூட அவர்களை வர விடாமல் தடுக்கிறார்கள். மோனோ பாலி செய்ய பார்க்கிறார்கள். திமுக - அதிமுக ஒரே இடத்தில் வைத்துதான் இரண்டையும் நாங்கள் பார்க்கிறோம்.
விஜயின் பிளான்: திமுக ஒரு பக்கம் ஆட்சி செய்யும்.. இல்லையென்றால் அதிமுக ஆட்சி செய்யும். வேறு யாரும் வந்தால் அவர்களை வளர விட மாட்டார்கள். அல்லது மொத்தமாக தங்களின் கூட்டணிக்கு உள்ளேயே இழுத்துக்கொள்வார்கள். இப்படித்தான் மாற்றி மாற்றி செய்வார்கள். வேறு எந்த கட்சியும் வளர விட மாட்டார்கள்.
எங்கள் மீது விமர்சனம் வைக்க முடியவில்லை என்பதால் எழுத்துப்பிழையை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் சினிமாவையே நிறுத்திவிட்டு அரசியல் தொடங்க போகிறார். அவர் சினிமாவில் நடித்து முடித்துவிட்டு முழுமையாக அரசியலுக்கு வரப்போகிறார். அவரின் கமிட்மென்ட் முடித்துவிட்டு மொத்தமாக அரசியலுக்கு வருவார்.
மக்கள் எதிர்பார்ப்பு: விஜய் அரசியலுக்கு வந்ததும் ஒரு போரே ஏற்படும். போர் வந்தால் பார்த்துக்கொள்வோம் என்று சொல்வார்களே. அப்படி ஒரு போர்தான் ஏற்பட போகிறது. அவர் யாருக்கான அரசியல் செய்கிறார்.. செய்ய போகிறார் என்பதை சமிக்கையாக கொடுத்து வருகிறார். இப்போது கொடுப்பது வெறும் அறிகுறிதான். சினிமா பாணியில் சொன்னால் இது வெறும் டீசர்தான். விரைவில் டிரைய்லர் வரும். அதன்பின் மெயின் பிக்சர்தான்.
முழு நேரமாக அவர் அரசியலுக்கு வருவார். தன் மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்பதால்தான் சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே அரசியலுக்கு வருகிறார். மார்க்கெட் இருக்கும் போதே அரசியலுக்கு வருகிறார். ரஜினி, கமல் மீதான விமர்சனம் இதுதான். மார்க்கெட் போன பின் வருகிறார்கள் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
ஆனால் விஜய் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்குள் வருகிறார். புதிய பலமாக அவர் கட்சிக்கு உள்ளே வருகிறார். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்கள் போயஸ் கார்டனில் வீடு கட்டவோ.. ஸ்கார்பியோ கார் வாங்கவோ வரவில்லை. நாங்கள் எளிமையான மக்கள்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் எளிய மக்கள் . தமிழ்நாட்டில் ஜாதி ரீதியிலான மோதல் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும். ஜாதி பிரச்சனை தொடங்கி மக்கள் பிரச்சனை வரை. பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் என்று பலரின் அரசியல் கொள்கையை சேர்த்து விஜய் அரசியல் செய்வார். மதத்தை வைத்து அரசியல் செய்வது யார்? ஜாதியை வைத்து அரசியல் செய்வது யார்? அதை எல்லாம் உடைக்க போகிறார் விஜய்.
அவங்களுக்கு எதிராகவே அரசியல் செய்ய போகிறார் விஜய். அதை விஜய் அவரின் வாயாலேயே விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார், என்று ராம் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications