மோடிக்கு மாற்று.. எதிர்கட்சிகள் கொண்டு வரப்போகும் அந்த "முகம்".. திடீரென ஒரு மாற்றம்.. ட்விஸ்ட்
சென்னை: தேசிய அளவில் மோடிக்கு மாற்று வரும். திடீரென ஒரு மாற்றம் வரும். ஒருவர் மாற்றாக வருவார். மாற்றாக ஒருவர் திடீரென யோசிக்காமல் வருவார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் இதுவரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. நரேந்திர மோடிக்கு எதிராக இதுவரை இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் திட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக யாரையும் நிறுத்தவில்லை. அது பலவீனம்தான். ஆனால் அதனால் பெரிய பிரச்சனை இல்லை. அவருக்கு மாற்று வரும். திடீரென ஒரு மாற்றம் வரும். ஒருவர் மாற்றாக வருவார். மாற்றாக ஒருவர் திடீரென யோசிக்காமல் வருவார். இந்திரா காந்திக்கு மாற்று வருவார்களா என்று நினைத்த போது மாற்று வந்தனர். ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது நரசிம்மராவ் வந்தார்.
கூட்டணி தலைவர்: யாராவது ஒருவர் திடீரென தோன்றுவார். சோனியா பிரதமர் ஆக முடியாத போது மன்மோகன் சிங் வந்தார். மோடி இல்லையென்றால் யாருமே இல்லை என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக ஒருவர் வருவார். மோடிக்கு முன் இந்தியா இருந்தது. மோடிக்கு பின்பும் இந்தியா இருக்கும். மோடி வந்த பின்புதான் நாம் வாழ தொடங்குவோமா? மோடி இல்லையென்றால் பாஜக என்ன ஆகும்? இது பாஜகவின் வீக்னசையும் காட்டும். யார் ஜெயிப்பார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்று சொல்ல நினைக்கவில்லை.
மோடி நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார். இதன் அர்த்தம் என்ன? முதல் இரண்டு கட்டத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அதை பற்றி எதுவும் சொல்ல முடியாது. இன்னும் கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு பின்பே எக்சிட் போல் முடிவுகள் வரும். அதுவரை எதுவும் சொல்ல முடியாது. தென்னிந்தியாவில் பாஜகவிற்கு பெரிய சரிவு இருக்கும். தமிழ்நாட்டில் கடந்த முறை பாஜக கடுமையாக தோல்வி அடைந்தது.
பெரிய வீழ்ச்சி: பாஜகவிற்கு அது பெரிய வீழ்ச்சியாக இருந்தது. தெலுங்கானா, ஆந்திராவில் வீழ்ந்தது. கேரளாவிலும் வீழ்ந்தது. இங்கெல்லாம் பாஜகவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்படும். கர்நாடகாவில் மீண்டும் பாஜக வராது. அங்கே பாஜகவிற்கு பெரிய சரிவு இருக்கும். தெற்கில் பாஜகவிற்கு பெரிய சரிவு இருக்கும். வடக்கில் எப்படி இருக்கும் என்று தெரியாது. மோடியின் இஸ்லாமிய பேச்சு வடக்கில் நிலைமையை மாற்றலாம். வடக்கில் பாஜகவிற்கு இடங்களை கொடுக்கலாம்.
இந்த பேச்சு உங்களுக்கு வாக்குகளை கொடுக்கும் என்று மோடியிடம் அவர் டீம் சொல்லி இருக்கலாம். அவரின் டீம் சொன்ன காரணத்தால்தான் மோடி இப்படி எல்லாம் பேசுகிறார். மோடி ஜெயித்தாலும்,தோல்வி அடைந்தாலும் நிலைமை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். ரேவண்ணா கேஸ் பாஜகவிற்கு எதிராக மாறாது. பாஜகவின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக அது இருக்காது.
மோடி வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த பிரச்சனை இருந்தாலும் வாக்களிப்பார்கள். இது தேர்தல் முடிவை மாற்றாது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications