Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது திமுக vs பாஜகவா? “எப்பவுமே நாங்கதான்”.. இறங்கி அடிக்கும் அதிமுக ஐடி விங்! சரமாரி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருபக்கம் அண்ணாமலை இனி திமுக - பாஜக இடையே தான் போட்டி எனச் சொல்ல, "அட ஓரமா போங்கப்பா" எனச் சொல்லும் வகையில் திமுக - அதிமுக ஐடி விங்குகள் கடுமையான சமூக வலைதள சண்டையில் இறங்கி இருக்கின்றன. ஆசிரியர்கள் போராட்டத்தை மையமாக வைத்து திமுக ஐ.டி விங்- அதிமுக ஐ.டி விங் இடையே, சமூக வலைதளங்களில், 'இந்தக் குரல் யாருடையது' எனக் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

அதிமுக ஐடி விங் புதிதாக ஒருங்கிணைப்பட்டு ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், தி.மு.க ஐ.டி விங்கிற்கு எதிராக கடுமையாக சண்டை செய்து வருகிறது. அதிலும், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், திமுக தரப்பு, எடப்பாடி பழனிசாமியை சீண்டிய நிலையில், அதற்கு அதே பாணியில் உடனடியாக ரியாக்ட் செய்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி.

Whose voice is this?: Admk it wing is on full swing in retaliating dmk

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் என மூன்று வகையான ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்கள் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது என்றும் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். மேலும், "எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்பதே மு.க.ஸ்டாலினின் கொள்கை என்றும் விமர்சித்தார் ஈபிஎஸ்.

இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள் சங்கத்தினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடந்து வந்தனர். இந்நிலையில்தான், நேற்று காலையில் போராட்டக்களத்தில் இருந்த ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீசார் அவர்களை கைது செய்து பல்வேறு இடங்களில் அடைத்தனர். அப்போது, ஆசிரியர்களின் குழந்தைகள் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க ஐடி விங்கின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், "ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் இந்த குரல் யாருடையது?" என்ற கேப்ஷனுடன் முழுநேர ஆசிரியர்களின் போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பேசியதை பதிவு செய்து இருந்தனர். அந்த ஆடியோவில், முழுநேர ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு, அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கள் என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ஐ.டி விங் சமூக வலைதள பக்கத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு தேர்தல் சமயத்தில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்ன? என்பது குறித்து, 'ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்றும் இந்த குரல் யாருடையது? ' என்று ஆடியோவை பதிவு செய்துள்ளனர்.

மேலும், "மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதிய உரிமை வேண்டி நடத்திய போராட்டத்தை மறைக்க, மடைமாற்ற, அவர்களின் வலி உணராமல், மாதம் ரூ.80,000 சம்பளம் வாங்கும் முழுநேர ஆசிரியர்களின் போராட்டம் குறித்த ஆடியோவை எடுத்து வெளியிட்டு திசை திருப்ப நினைப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு இந்த போராட்டத்தை திசை திருப்பாமல் நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 311ன் மற்றும் 181ன் படியும் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பதையும் பணி நிரந்தரம் என்பதையும் விரைந்து நிறைவேற்றுக." என்று பதிவிடப்ப்பட்டுள்ளது.

இந்த விவகார முன்வைத்து திமுக மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வழக்கமாக சமூக வலைதளங்களில் திமுக ஐடி விங் தான் பலமாக விமர்சனங்களை முன்வைக்கும். அதற்கு பதிலடி கொடுக்க அதிமுக ஐடி விங் சற்று திணறும் என்றே சொல்லலாம். அண்மைக்காலமாக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிமுகவோடு போட்டி போட்டு வந்தனர்.

Whose voice is this?: Admk it wing is on full swing in retaliating dmk

அண்மையில், நான்கு மண்டலங்களாக இருந்த அதிமுகவின் ஐடி மொத்தமாக கலைக்கப்பட்டு, ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், மதுரை மண்டல ஐ.டி விங் செயலாளராக இருந்த ராஜ் சத்யன், அதிமுக ஐடி விங்கின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மாவட்ட அளவில் ஐ.டி அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் தான் நடைபெற்றது.

இந்நிலையில், அதிமுகவின் ஐ.டி விங், பல்வேறு மட்டங்களிலும் அசுரபலத்தோடு இருக்கும் திமுக ஐடி விங்கிற்கு சவால் விடும் அளவுக்கு விரைவாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் போராட்ட விவகாரத்தில் திமுக ஐ.டி விங்கிற்கு உடனடி ரியாக்‌ஷன் கொடுத்து திணறடித்துள்ளது. அதிமுக ஐடி விங் வெளியிட்ட 'ஸ்டாலின் குரல்' வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இது பலரின் கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2024 தேர்தலில் திமுக - பாஜக இடையேதான் போட்டி இருக்கும், நாங்கள் யாருடன் சண்டை செய்வது என தெளிவாக இருக்கிறோம் எனப் பேசியிருந்தார். அண்ணாமலை இவ்வாறு கூறினாலும், தமிழ்நாட்டில் என்றைக்கும் திமுக vs அதிமுக அரசியல் தான் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறது அதிமுக ஐடி விங்கின் இந்த அதிரடிச் செயல்பாடுகள். இது வரும் நாட்களிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+