முதுகில் குத்துறாங்க? கண்கள் சிவந்த எடப்பாடி.. நேக்காக "எஸ்கேப்" ஆன 2 மாஜிக்கள்.. பாஜக பக்கா மூவ்!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியோ முறிவு தொடர்பான எந்த விவகாரங்களிலும் 2 முக்கியமான மாஜி அமைச்சர்கள் பெரிதாக தலை காட்டவில்லை. அதிமுக கூட்டத்திற்கு வந்தால் கூட.. மீடியா வெளிச்சம் படாமல் அவர்கள் ஓரமாகவே இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக - பாஜக இடையிலான மோதல் முற்றிலுமாக முடிந்துவிட்டாலும்.. வெளியே முடிந்தது போல தெரிந்தாலும் உண்மையில் இந்த மோதல் முடிவிற்கு வரவில்லை என்றுதான் பாஜக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணி வேண்டாம். அவர்களோடு கூட்டணி தொடர விரும்பவில்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது. அதோடு 2024 லோக்சபா தேர்தலில் தனியாக கூட்டணி அமைத்து நிற்க போகிறோம் என்றும் பாஜக அறிவித்துவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக - அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில்.. கூட்டணி உடைந்தது உண்மைதான் . அதே சமயம் கூட்டணியை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக சில கண்டிஷன்கள் இதற்காக போடப்பட்டு வருகின்றன. அதை செய்தால் பாஜகவோடு கூட்டணியை தொடர ரெடி என்று அதிமுக கூறி வருகிறதாம்.
அதாவது அண்ணாமலையை மாற்றுவது, குறைவான தொகுதிகளை லோக்சபா தேர்தலில் கேட்போம் என்று உறுதி தருவது, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று வாக்குறுதி வாங்குவது போன்ற சில உறுதியை அளித்தால் மட்டுமே கூட்டணி தொடரும். இல்லையென்றால் கூட்டணி நடக்க வாய்ப்பே இல்லை என்று அதிமுக கண்டிஷன்களை போட்டு வருகிறதாம்.
2 மாஜிக்கள்: இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள், ஆலோசனை எல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த கூட்டணி மோதல் எதிலும் 2 முக்கியமான மாஜிக்கள் தலையிடவே இல்லை. பொதுவாக கட்சி விவகாரங்களில் அவ்வப்போது இவர்கள் பேசுவது வழக்கம். ஆனால் 2 பேருமே கட்சி கூட்டணி தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கட்சி கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டனர்,
கட்சியின் ஆலோசனைகளில் கருத்து தெரிவித்தனர். ஆனால் டெல்லி சென்ற குழுவில் இவர்கள் இல்லை. பேட்டி அளித்த போது இவர்கள் வரவில்லை. தனியாக பேட்டி அளிக்கவில்லை. பாஜக பற்றி எங்கும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கூட்டணி உடைந்ததை பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. காரணம் இவர்கள் பாஜகவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க இவர்கள் விரும்பவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு எதிராக சில வழக்குகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இருக்கின்றன. அதை காரணம் காட்டி இவர்கள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் பாஜகவை பற்றி எதுவும் பேசாமல் அமைதி காப்பதாக கூறப்படுகிறது. இதன் எல்லாம் பார்த்துதான் எடப்பாடி அதிருப்தியில் இருக்கிறாராம். இவங்க இரண்டு பேர் மட்டும் ஏன் எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்கள் செயல்பாடு எதுவும் சரியில்லையே.
இவர்கள் நோட்டம் சரியில்லையே. எதிர்காலத்தில் முதுகில் குத்த போகிறீர்களா? பாஜக பக்கம் தாவ போகிறார்களா? பாஜக எதுவும் இதற்காக காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறதா? என்று விசாரித்து வருகிறாராம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications