"170" தான் பைனல்.. அவங்களை விடுங்க.. ஸ்கெட்ச் போட்ட எடப்பாடியார்.. கச்சிதமுகமாக முடித்த கேபிஎம்!
சென்னை: தேர்தல் பணியில் அதிமுக வேகம் எடுத்து வரும் அதேவேளையில், நேற்றைய தினம் கேபி முனுசாமியின் பேச்சின் பரபரப்பு இன்னமும் குறையவில்லை.. மற்றொருபுறம் பாஜகவும் தன் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை.
கேபி முனுசாமி நேற்று ஒரே நாளில் வைரலாகிவிட்டார்.. அவரது பேச்சு அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை தந்தது.
"சில கருங்காலிகள் திராவிட இயக்க ஆட்சியில் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்கிறார்கள். சில தேசிய கட்சிகள், சில சந்தர்ப்பவாதிகள், பெரியார் காலத்தில் இருந்து, திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று அலையும் கூட்டம் அவ்வாறு சொல்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காலத்தில் சிலர் உள்ளே நுழைந்துவிடலாம் என நினைக்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.

காரணம்?
கேபி முனுசாமி குறிப்பிட்டு பேசிய கட்சி பாஜக என்பது அனைவரும் அறிந்த ஒன்றே... துணை முதல்வர், முதல்வர் மேடையில் இருக்கும்போதே முனுசாமி ஏன் இப்படி பேசினார்? பின்னணி காரணம் என்ன? என்பது குறித்து ஒருசிலரிடம் விசாரித்தோம். அவர்கள் அனுமானத்தில் சொன்னதாவது:

பிரச்சாரம்
"சென்னை அதிமுக பிரச்சார கூட்டம் பற்றி ஏற்கனவே ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.. அதில் நிறைய விஷயம் அலசப்பட்டிருக்கிறது.. முக்கியமாக பாஜகவுடன் கூட்டணி பற்றி பேசியிருக்கிறார்கள்.. ஏற்கனவே கடந்த எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எந்த லாபமும் இல்லை.. மக்களிடம் அதிருப்தியை பெற்றதுதான் மிச்சம்.

பாஜக
மறுபடியும் இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது சரியாக இருக்காது.. அதேசமயம், இந்த கூட்டம் மூலமாக ஒரு பதிலை பாஜக தரப்புக்கு சொல்லியாக வேண்டும்" என்றெல்லாம் பேசியதாக தெரிகிறது.. அதனால்தான், அந்த பொறுப்பை கே.பி.முனுசாமியிடமே முதல்வர் ஒப்படைத்திருக்கிறார். அன்று ஜெயலலிதா இறந்தபோதும், சசிகலாவை முதலில் எதிர்த்து பேசியது இதே முனுசாமிதான்.. இது வழக்கமாக அதிமுகவில் உள்ள ஃபார்முலா.

எம்ஜிஆர்
அப்போதெல்லாம் எம்ஜிஆர் இப்படித்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோரை வைத்து எதிர்தரப்பினருக்கு பதில் தருவார்.. தாம் பொறுப்பில் உள்ளதால், இதுபோன்ற முக்கிய நபர்களை வைத்து பேச வைப்பது அன்றிலிருந்து அதிமுகவுக்குள் நடக்ககூடியதுதான்.. அதைதான் முனுசாமி பேசியிருக்கிறார். கூட்டணி ஆட்சி இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னதன் மூலம், வம்பு பிடித்து, துணை முதல்வர் பதவியை கேட்டு கொண்டிருக்கும் பாமகவுக்கும் பதிலடி தரப்பட்டுள்ளது.

சொந்த கருத்து
ஒருவேளை இது பிரச்சனையாக கூட நாளை உருவெடுக்கலாம்.. அப்படியே கேட்டாலும் அது அவர் சொந்த கருத்து என்றும் காரணம் சொல்லலாம். ஆனால், இப்போதைக்கு 170 சீட்டுகளை வைத்து கொண்டு அதிமுக போட்டியிட தயாராவது போல தெரிகிறது.. மொத்தத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்கவும் அதிமுக எல்லாவிதத்திலும் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளதையே நேற்றைய முனுசாமி முனுசாமியின் பேச்சு உணர்த்துகிறது" என்றனர்.

எல்.முருகன்
கேபி முனுசாமி என்னதான் இப்படி பேசினாலும், எல்.முருகன் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்..
"வருகிற சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய பாஜக சகோதரன், என்னுடைய பாஜக சகோதரி சட்டமன்றத்தில் அமர்ந்தே தீருவார்.. பாஜகவின் காலம், வருகிற ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்பதை நிர்ணயம் செய்வோம்" என்று நேற்றும் தன் கட்சி கூட்டத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications