6 வேட்பாளர்கள் லிஸ்ட் அவசரமாக வெளியானது ஏன்?.. மேட்டரே வேறயாம்.. முணுமுணுக்கும் தகவல்கள்!
சென்னை: தொகுதி பங்கீடு உடன்பாடே இன்னும் முடியாத நிலையில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மேட்டரே வேறயாம்.
தேர்தல் என வந்துவிட்டாலே தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு, பேச்சுவார்த்தை, இழுபறி, தாமதம், தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல் என எல்லாம் களைகட்டும். அந்த வகையில் அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுதான் இருக்கிறது.
திமுகவில் காங்கிரஸ், அதிமுகவில் தேமுதிக என இன்னும் பைனல் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. இறுதி செய்யப்படாத இரு கட்சிகளும் தொகுதியை அதிகம் கேட்டு வருகின்றன. ஆனால் கூட்டணி தலைமையோ அவ்வளவு சீட்டெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.

ஆலோசனை
இதனால்தான் இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. நேற்று மாலை பாமகவுடன் தொகுதிகளை இறுதி செய்யும் ஆலோசனை நடத்தவிருந்த நிலையில் அதிமுக லிஸ்டை வெளியிட்டது.

வேகம்
இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக அதிமுக 190 இடங்களில் போட்டியிடும் என தெரிகிறது. அவ்வாறிருக்கையில் வெறும் 6 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. மேலும் இழுபறியில் உள்ள தேமுதிகவுக்கு தங்களது வேகத்தை உணர்த்துவதற்காகவே இது போன்று அதிமுக செய்ததாக சொல்லப்படுகிறது.

25 டூ 23
மேலும் நீங்கள் 41லிருந்து 25 க்கு வாங்க, 25 லிருந்து 23க்கு வாங்க.. ஆனால் நாங்க தருவது 15 முதல் 18 வரைதான். நாங்கள் பாட்டுக்கு எங்க வேலையை பார்க்கிறோம் என தேமுதிகவுக்கு அதிமுக சொல்லாமல் சொல்லியதாகவே இந்த மூவ் பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து சில அரசியல் பார்வையாளர்கள் வேறு மாதிரியான கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

ஜெ. இறந்த தேதி
அதாவது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, சுபமுகூர்த்த தினம், ஜெயலலிதா இறந்த தேதியான 5 (05.12.2016) இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ராகு காலம் 10.30 - 12 கழித்து அதிமுக 6 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மற்றபடி கூட்டணி கட்சிகளுக்கு எந்தவித நெருக்குதலையும் தருவதற்காக இப்படி செய்யவில்லை என்கிறார்கள்.

அதிமுக தொகுதிகள்
அவ்வாறு கூட்டணி கட்சிகள் அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளை கேட்டு விடக் கூடாது என அதிமுக நினைத்திருந்தால் 190 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கும். ஆனால் அதிமுக அது போல் செய்யவில்லை. எனவே இந்த 6 வேட்பாளர்கள் வெளியிட்டது நல்ல காரியத்தை நல்ல நாளில் சுபமுகூர்த்த தினத்தில் செய்ய வேண்டும் என்பதற்காகவே என்கிறார்கள்.

இது உண்மையா
ஆனால் இப்படிக் கூறப்பட்டாலும் கூட முதல் கட்டமாக ஒரு வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது என்றால் அடுத்தடுத்து லிஸ்ட் ரெடியா இருக்கு.. சீக்கிரமா வந்து வேலையை சட்டுப்புட்டுன்னு முடிங்க, இழுத்தடிக்காதீங்க என்று கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுகமாக அதிமுக மெசேஜ் அனுப்பியதாகவே இது பார்க்கப்படுகிறது. இதை உண்மையில் அதிமுக தொண்டர்களும் கூட வரவேற்கவே செய்கின்றனர். முழுப் பட்டியலையும் கூட அதிமுக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications