மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களுக்கே இந்த நிலையா? திமுக எம்பி ஆ ராசா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்ட களத்தில் காவலர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கக்கூட ஒன்றிய அரசின் அனுமதி தேவையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்களுக்கே இந்த நிலையா? ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு என திமுக எம்பி ஆ ராசா ஆவேசமாக கூறினார்.

டெல்லியில் ஆ ராசா எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், தலைநகர் டெல்லியில், வெகுண்டெழுந்து போராடிய, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறையால், காயமடைந்த, மயக்கமடைந்த, பாதிப்படைந்த மாணவர்கள் ராம்லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களை அனுப்பி அவர்களை எல்லாம் சந்தித்து ஆறுதல் கூறுமாறு அறிவுறுத்தினார். அதேபோல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தால், அவர்களுடைய உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுமாறு அறிவுறுத்தினார். அதன்படி இன்றைய தினம் மருத்துவமனைக்கு வந்து பார்த்தோம்.

Is this the plight of even MPs elected by the people DMK MP A Raja asks

மருத்துவமனையில் மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று சென்றுவிட்டார்கள். ஓரிருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், பார்க்க அனுமதிக்க இயலாத சூழ்நிலை இருப்பதாக சொன்னார்கள்.. அவர்களுக்கு வழங்கப்படுகின்ற, மருத்துவ சிகிச்சையை, கண்காணிப்பதாக கேட்டறிந்தோம். அவர்களுடைய உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

அவர்களை சந்திப்பதற்கே சுகாதாரத்துறை அமைச்சர் அனுமதி தந்தால் தான் அனுமதிப்போம் என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அவர்கள் அரசால் மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது அவரது வார்த்தைகளில் இருந்தும், பேச்சுக்களில் இருந்தும், தொணியில் இருந்தும், உடல் மொழியில் இருந்தும் அறிந்து கொண்டோம். என்றாலும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்துள்ளோம். ஒரு நோயாளியை சந்திப்பதற்கு கூட ஒன்றிய அரசின் அனுமதி அனுமதி பெற்றுத்தான் சந்திக்க வேண்டும் என்று கண்காணிப்பாளர் சொல்லும் அளவிற்கு ஒரு கொடுங்கோலான ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்" இவ்வாறு ஆ ராசா கூறினார்.

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக வெளியிட்ட பதிவில், "புதுடெல்லியில் மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் தற்போது நாடு முழுவதிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது நாங்கள்தான். அதனால்தான், நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, திமுக தொடக்கம் முதலே அதனை எதிர்த்து வருகிறது.

சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டி, முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது; அது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே. பிற கோரிக்கைகளை விட, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே இந்தப் போராட்டங்களின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பது மட்டுமே இந்த அனைத்துச் சிக்கல்களுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும்"இவ்வாறு கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+