உதயநிதி சொன்னதை.. பர்சனலாக எடுத்துக்கொண்ட விஜய்.. ஆதாரத்தை கலெக்ட் பண்ணுங்க.. பறந்த ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, முதல்வர் விஜய் எழுப்பிய பார்ட்டி ஃபண்ட் புகார், மாநில அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

கடந்த கால ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் பிற அரசுத் துறைகளில் இருந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாக முதல்வர் விஜய் மிகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்தார்.

CM Vijay

இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பேசக்கூடாது.. தகுந்த சான்றுகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுகவின் இந்த மறுப்பைத் தொடர்ந்து, வழக்கமான அரசியல் மேடை விவாதமாக இதை விட்டுவிடாமல், சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் களமிறங்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறை அதிகாரிகளுக்குத் தீவிர உத்தரவு

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை வெறுமனே வாய்மொழி குற்றச்சாட்டாக விடாமல், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவையில் அதிகாரப்பூர்வ அறிக்கையாகச் சமர்ப்பிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் மற்றும் நிதி, மதுவிலக்குத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளில் அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய வருவாய் எங்கு, எப்படித் திருப்பப்பட்டது, ஒப்பந்தப் புள்ளிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டத் தொகைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் கோப்புகளை உடனடியாகத் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அக்னிப்பரீட்சை

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர், மிகுந்த அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமர்வின் போது, எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க தவெக அரசு ஆயத்தமாகி வருகிறது.

கடந்த முறை, "நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்கள் சேவை செய்யத்தானே தவிர, கமிஷன் அடிக்க அல்ல" என்று பேரவையில் முழங்கிய விஜய், இந்த ஆதாரங்களை வெளியிடுவதன் மூலம் எதிர்க்கட்சியின் வாயை அடைக்க வியூகம் அமைத்து வருகிறார்.

இதன் மூலம், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் காரசாரமான விவாதங்களும், அரசியல் மோதல்களும் வெடிக்கும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+