நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் பறிமுதல் செய்த அலெக்சாண்ட்ரியன் கிளிகளை வளர்க்க தடை ஏன்? ஸ்வாரஸ்ய தகவல்
அலெக்சாண்ட்ரியன் கிளிகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டது ஏன்
சென்னை: அலெக்சாண்ட்ரியன் கிளிகளை வீடுகளில் வளர்க்க இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அந்த கிளிகளை வனத்துறையினர் அனுமதியின்றி வளர்த்ததாக அந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரோபோ சங்கருக்கு ரூ 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அலெக்சாண்ட்ரியன் கிளிகளை ஏன் வீடுகளில் வளர்க்கக்கூடாது, அவை வீடுகளில் வளர்ப்பது எப்போதிலிருந்து தடை செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

20 கிளிகள் இனம்
கடந்த 500 ஆண்டுகளில் 20 கிளிகள் இனத்தை உலகம் முழுவதும் இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். இன்றைய தினம் அனைத்து கிளிகள் இனங்களிலும் 27 சதவீத கிளி இனங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, இயற்கையான வாழ்விட இழப்பு, சீரழிவு, வேட்டையாடப்படுதல், செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு வர்த்தகமயம் உள்ளிட்டவைகள் இந்த கிளி இனங்களின் இழப்புக்கு பெரும் பங்காற்றியுள்ளன.

1700 பறவைகள்
டெல்லியில் கடந்த ஆண்டு 1700 பறவைகள், பறவைகள் விற்பனை சந்தையிலிருந்து மீட்கப்பட்டன. இவற்றில் 500 பறவை குஞ்சுகளும் இருந்தன. இவற்றை காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு தங்கள் பிடியில் வைத்திருந்தது தெரியவந்ததது. இந்த அலெக்சாண்ட்ரியன் கிளிகள் ஒருவிதமான சப்தத்தை எழுப்பும், இவை அழகாக பாடும். இதன் இருப்பிடம் காடுகள்தான். பிறகு உங்கள் இருப்பிடம் அருகேவும் பார்க்க முடியும். இவை கூட்டம் கூட்டமாகவே வாழும் குணம் கொண்டவை.

ஆண் எது பெண் எது
இவற்றில் ஆண் எது, பெண் எது என்பதை அதன் உடல் அமைப்பை வைத்து கண்டறியலாம். இனப்பெருக்க காலங்களில் ஆணும் பெண்ணும் மர பொந்துகளில் வசிக்கும். பெண் பறவை முட்டையிட்டு அடைகாக்கும் போது பெண் பறவைக்கு தேவையான உணவை ஆண் பறவை கொண்டு வரும். சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்பதை இந்த பறவைகளுக்கு பொருந்தும், நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே திருப்பி சொல்லும்.

இயற்கையான வாழ்விடம்
இயற்கையான வாழ்விடத்தை விட்டு இந்த கிளிகள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் அதன் வாழ்நாள் கணிசமாக குறைகிறது. கூட்டம் கூட்டமாக வாழும் குணம் கொண்ட இந்த கிளிகளை தனித்து வாழும் நிலைக்கு தள்ளுகிறோம். அவை மிகவும் கொடூரமான நிலைகளில் வைக்கப்படுகின்றன. எனவேதான் இவற்றை வீட்டில் வளர்ப்பது சட்டபடி குற்றமாகும். சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலுக்கு அதிக அளவில் பணம் சம்பாதித்து கொடுக்கிறது. இவை எளிதாக நோயை பரப்பும்.

வெளிநாடுகள்
இவற்றை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்வதால் சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை கொடுக்கிறது. இதனால் இந்தியாவில் இந்த கிளிகளை கடத்துவதை தடுக்க கிளிகள் விற்பனை செய்வது 1990 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பறவைகளை பிடித்து வைத்து விற்பனை செய்வதும், வீடுகளில் வைத்திருப்பதும் சட்டத்திற்கு புறம்பானது. இந்த பறவைகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவை, இவை நன்றாக பேசும். பொதுவாக இதன் வாழ்நாள் 25 முதல் 30 ஆண்டுகளாகும். ஆனால் இவற்றை தனியே அடைத்து வைப்பதால் இதன் ஆயுட்காலம் குறைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கிளிகள் பூச்சிகள், கொட்டைகள் , பழங்களை உட்கொள்ளும். இந்த கிளிகளுக்கு தண்ணீர் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால் விருப்பப்பட்டால் மட்டுமே குளிக்குமாம். இந்த கிளிகள் பிறந்த 3 மாதங்களிலோ அல்லது 12 மாதங்களிலோ பேச தொடங்கும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications