"சாதி 60".. எல்லாத்துக்கும் காரணம் அந்த "ஒரு" தொகுதிதான்.. ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த தினகரன்!
தேமுதிக தினகரனுடன் கூட்டணி வைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: தேமுதிக - அமமுக கூட்டணி குறித்த அடுத்தடுத்த செய்திகள், தமிழக அரசியல் களத்தையே விவாதத்துக்கு உள்ளாக்கி வருகின்றன.
மொத்தம் 2 விஷயங்களை அலச வேண்டி உள்ளது.. ஒன்று, விஜயகாந்த் கட்சிக்கு இந்த அளவுக்கு ஒரு பெரிய அவமானம் தேவையா? மற்றொன்று, 60 சீட்களை தேமுதிகவுக்கு தினகரன் ஒதுக்க என்ன காரணம்?
தமிழக அரசியலை பொறுத்தவரை, அமமுகவை விட சீனியர் தேமுதிகதான்... தினகரனைவிட சீனியர் விஜயகாந்த்தான்..

விஜயகாந்த்
இவர் உருவாக்கிய தேமுதிக உருவாக்கிய பல புரட்சிகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இப்போது விஜயகாந்த் கட்சி தனது அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய அவமானத்தை தானே போய்த் தேடி சம்பாதித்துள்ளது.

கூட்டணி
தன்னை விட ஜூனியரான அமமுகவிடம் போய் சீட் கேட்டு வாங்கியுள்ளது... நியாயப்படி பார்த்தால் அமமுகவுக்கு தேமுதிகதான் சீட் ஒதுக்கி கொடுத்திருக்க வேண்டும்... தேமுதிகதான் கூட்டணி தலைமையை ஏற்று நடத்தியிருக்க வேண்டும்.. அமமுகவுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.. ஆனால், அப்படி இல்லாமல் அமமுக கட்சி, தேமுதிகவுக்கு 60 சீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளது.. அதாவது வரலாற்றை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது தேமுதிக. இது விஜயகாந்த்தின் உண்மையான விசுவாசிகளை வேதனைப்பட வைத்துள்ளது.

கமல்
கமல், தினகரன் எல்லம் ஜூனியர்கள் அவர்களிடம் போய் நாங்கள் நிற்க மாட்டோம் என்று விஜயகாந்த் மகன் தெனாவெட்டாக பேசி வந்தார், சவால் விட்டார். ஆனால் கடைசியில் அதே ஜூனியரிடம் போய் இந்தக் கட்சி சீட்டுகளை வாங்கி வந்துள்ளது. இப்படி ஒரு நிலைக்கு தேமுதிக வந்ததற்கு என்ன காரணம். இனியாவது அதை சீர்தூக்கிப் பார்த்து மீண்டு வர முயற்சி செய்தால் விஜயகாந்த்துக்கு கொஞ்சமாவது கெளரவம் சேர்த்தது போலாகும். "எதுக்குடா எங்க வீட்டுவாசலில் வந்து கூட்டணிக்காக நின்னீங்க?" என்று அன்று விஜயபிரபாகரன் பேசியதை இந்த நேரத்தில் நினைவுகூற வேண்டியும் உள்ளது.

10 சீட்டுகள்?
மற்றொரு விஷயம், தேமுதிகவுக்கு 60 சீட்டுகளை அமமுக ஒதுக்கி உள்ளது.. 15 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று அதிமுக பிடிவாதம் காட்டிய நிலையில், 10 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று திமுக கறார் காட்டிய நிலையில், பாஜக கொஞ்சமும் கண்டுகொள்ளாத நிலையில், கமல், தேமுதிகவை ஏறெடுத்தும் பார்க்காத நிலையில், எதற்காக 60 சீட்டுகளை தினகரன் தந்தார்? என்ற சந்தேகமும் எழுகிறது.

கோவில்பட்டி
இதுகுறித்து நாம் ஒருசிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொல்லும்போது, இதற்கெல்லாம் முக்கிய காரணம் தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதிதான்.. தொகுதிக்குள் அமமுகவுக்கு என்று தனி செல்வாக்கு இருக்கின்றன.. எனினும், கோவில்பட்டியில் கணிசமான நாயுடு சமுதாய வாக்குகளும் இருக்கின்றன..

கடம்பூர் ராஜு
இந்த சமுதாய வாக்குகளே தேர்தலின் வெற்றி தோல்வியை அந்த தொகுதியில் தீர்மானித்து வருகிறது.. மாவட்ட செயலாளரும் அதிமுகவின் வேட்பாளருமான கடம்பூர் ராஜூ ஆகட்டும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனுவாசன் ஆகட்டும், 2 பேருமே நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், எப்படியும் அந்த வாக்குகள் சிதறக்கூடும்.. பிரியக்கூடும்.

சமுதாய வாக்குகள்
இப்படிப்பட்ட சூழலில், தேமுதிகவை உள்ளே இழுத்து போட்டு கொண்டால், நாயுடு சமுதாய வாக்குகளை அப்படியே தன் பக்கம் கொண்டு வந்துவிடலாம் என்பதே தினகரனின் கணக்காக உள்ளதாம். சமுதாய வாக்குகள் என்ற ஒன்றின் மூலம், அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர் போன்றவர்களை எளிதாக வெற்றி வாய்ப்பை இழக்க வைக்கலாம் என்பதே தினகரனின் டபுள் திட்டம்.. அதனால்தான் தினகரன் கோவில்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே, அவசர அவசரமாக பேசி ஒப்பந்தமும் ரெடியானதாம்..!












Click it and Unblock the Notifications