ஆமா அண்ணாமலை எங்கே? அமித்ஷாவை வரவேற்ககூட ஏர்போர்ட் வரலையே.. பொன்னாடை போர்த்தியது யாரு கவனிச்சீங்களா?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த நிலையில் அவரை வரவேற்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிப் பணிகள், நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக வந்து இருக்கிறார். இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில பாஜக மூத்த தலைவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் பாஜக தலைவர்களின் வரவேற்பை தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார் அமித்ஷா. அவருக்கு வழி நெடுகிலும் சாலையின் இரு புறங்களிலும் பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். காரில் இருந்து கீழே இறங்கிய அமித்ஷா தொண்டர்கள் சிலருடன் உரையாடினார்.
அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷா, சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், பிற கட்சிகளின் பிரமுகர்கள் உட்பட 24 பேரை சந்தித்து இரவு விருந்து வழங்கினார். அந்த விருந்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் பாஸ்கரன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநரான விஜய் குமார் ரெட்டி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆற்காடு நவாப் முஹம்மது அலி, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
அமித்ஷாவின் இந்த தமிழ்நாடு பயணத்தில் முக்கிய நிகழ்வாக வேலூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அதேபோல் பாஜக மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விமான நிலையத்தில் அமித்ஷாவை வரவேற்கும்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எங்கே என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆனால், அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங். கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோதும் அண்ணாமலை உடன் இல்லாதது விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போது கர்நாடக தேர்தல் பணிகள் தொடர்பாக அண்ணாமலை சென்று இருக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, ‛‛எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கமாட்டோம். ஏனென்றால் நாங்கள் தினமும் மனதளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவென்று உங்களுக்கு தெரியாது'' என காட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் கிண்டியில் உள்ள உணவகத்தில் அமித்ஷாவை சந்தித்து வரவேற்று இருப்பதாக தெரிகிறது. அண்ணாமலை எங்கே என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்திய புகைப்படத்தை நள்ளிரவு 12.43 க்கு ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் அண்ணாமலை.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications