தங்க நகைகளை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்க போறீங்களா.. அசந்தால் நகையே பறிபோய்விடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகைகளை அடகு வைத்து மீட்க முடியாமல் நகையை தொலைத்த பலரும் இன்று ஏன் நகையை திருப்பாமல் விட்டோம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏனெனில் தங்க நகையின் விலை ஒரு பவுன் இன்றைய தேதிக்கு 90 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. வெறும் ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது. அதேபோல் தங்க நகையை அடகு வைக்க போனால், அதற்கான தொகையும் அதிகமாக கிடைக்கிறது. தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைப்போர், சரியாக செயல்படாவிட்டால் நகையை பறிகொடுக்க வேண்டியது தான் வரும்.

தங்க நகையை பொறுத்தவரை கடந்த ஆண்டு இதேநேரம் எல்லாம் ஒரு சவரன் 57000 என்கிற அளவில் தான் இருந்தது. அப்போது யாருக்குமே தெரியாது. டிரம்ப் அதிபராக போகிறார். நகை விலை எல்லாம் நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு போக அவர் முக்கிய காரணமாக போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அடுத்தடுத்து நடந்தது. வெறும் ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 32000 என்கிற அளவிற்கு உயர்ந்துவிட்டது. தங்கம் விலை ஒரு சவரன் இன்றைய தேதிக்கு 89,600 என்பதாக இருக்கிறது. ஒரு கிராம் 11,200 ஆக இருக்கிறது. 24 கேரட் தங்கம் விலை 8 கிராம் 97,744 ஆக இருக்கிறது. ஒரு கிராம் 24 கேரட் தூய தங்கம் 12,218 ஆக இருக்கிறது.

Why are people who pawn gold jewelry with private financial institutions unable to recover it

தங்கம் விலை உயர்வு ஏன்

பொருளாதார நெருக்கடிகள் அதிகமானதால், தங்கம் விலை அதிகமாகிவிட்டது. ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்காவின் வட்டி குறைப்பு, அமெரிக்கா நடத்தும் வர்த்தக போர், சர்வதேச அளவில் மந்த நிலை காரணமாக பல நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகமாக இருக்கிறது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். தங்கம் விலை ஏற ஏற தங்கத்தை அடகு வைத்தவர்களுக்கு கிடைக்கும் பணம் அதிகமாக கிடைக்கிறது. தங்கத்தை அடகு வைத்து பணம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.


எஸ்பிஐ, கனரா வங்கி

பொதுவாக எஸ்பிஐ, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் தங்கத்தினை அடகு வைத்த கடன் பெற்றால் வட்டி குறைவாக இருக்கும். 100 ரூபாய்க்கு 84 பைசா வட்டியில் கடன் தருவார்கள். சில வங்கிகளில் 95 பைசா வட்டியில் கடன் தருவார்கள். இது மிக குறைவான வட்டி விகிதம் ஆகும். ஆனால் பணம் சற்று குறைவாகவே கிடைக்கும்.

தனியார் நிதி நிறுவனங்கள்

ஆனால் தனியார் வங்கிகளில் மற்றும் நிதி நிறுவனங்கிளில் நிலைமை அடியோடு வேறு.. தனியார் வங்கிகளில் 13 முதல் 16 சதவீதம் வட்டியில் கடன் தருவார்கள்.. இதனை ஓராண்டிற்குள் திருப்பும் வகையில் இருக்கும். சரியாக கட்டிவிட்டால் பிரச்சனை இல்லை.. அதேநேரம் தனியார் நிதி நிறுவனங்களில் அதிக பணம் வாங்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்க போகிறீர்கள் என்றால், ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.. வங்கிகளை போல் பல மாதம் காத்திருந்து திருப்பலாம் என்று நினைத்தால் உங்களை நகையை மறந்துவிட வேண்டியது தான்.

என்ன சிக்கல்

ஏனெனில் நகையின் மதிப்பில் உச்சபட்சமாகவே பணம் வாங்கியிருப்பீர்கள்.. அதற்கு வட்டி 22 சதவீதம் ஆக இருக்கும். 50000 ரூபாய் வாங்கியிருந்தாலே மாதம் 10000 வட்டி கட்ட வேண்டிய நிலை இருக்கும். அவர்கள் மாதம் மாதம் வட்டி கட்ட தேவையில்லை மொத்தமாக 6மாதம் கழித்து கூட வட்டி கட்டலாம் என்பார்கள்.. ஆனால் நீங்களே நெருக்கடியான நிலையில் தான் கடன் வாங்கியிருப்பீர்கள்.. எனவே மாதம் மாதம் வட்டி கட்ட மறந்தால் மொத்தமாக கடன் அதிகரித்துவிடும்.. நகையின் மதிப்பு அதிகமாகியிருந்தால், உங்கள் நகையை திருப்ப வாய்ப்பு இருக்கும். மாறாக நகை மதிப்பு பெரிதாக உயரவில்லை என்றால், நகையை மறக்க வேண்டியது வரும். பலர் தங்க நகையை அடகு வைத்து சந்தர்ப்ப சூழலால் வட்டி கட்டி திருப்ப முடியாமல் தொலைத்திருக்கிறார்கள்.

அவசரத்திற்கு அடகு

எனவே தனியார் நிதி நிறுவனங்களில் அவசரத்திற்கு அடகு வைக்க போகிறீர்கள் என்றால், அடுத்த மாதமே திருப்ப முடியும் என்றால், அதிக பணத்துடன் அடகு வைத்து கடன் பெறலாம். இல்லை என்னிடம் இன்னொரு நகையும் இருக்கிறது என்று நினைத்தால், இரண்டையும் சேர்த்து ஒன்றாக அரசு வங்கிகளில் வைத்தால், தனியார் நிதி நிறுவனங்கள் தரும் மதிப்பில் அரசு வங்கிகளும் கடன் தரும். ஒரு ஆறு மாதத்தில் அதனை திருப்ப முயற்சி செய்யுங்கள்.

Why are people who pawn gold jewelry with private financial institutions unable to recover it
Photo Credit:

வட்டி விகிதம் 22 சதவீதம்

அதேநேரம் தனியாரில் தான் வைக்க வேண்டிய நிலை இருந்தால் குறைவான பணம் வாங்கினால் வட்டி 13 சதவீதமாக இருக்கும். ஆனால் மாதம் மாதம் சரியாக வட்டி கட்ட வேண்டும்.. இல்லாவிட்டால் வட்டி அப்படியே 22 சதவீதம் ஆகக்கூட வாய்ப்பு உள்ளது. எனவே சரியாக மாதம் மாதம் வட்டி கட்டி ஆறு மாதத்திற்குள் திருப்பினால் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். ஓராண்டு கடந்தால், அதற்காக பெரிய தொகையை இழக்க வேண்டியதிருக்கும். ஒரு சவரன் ஒரு லடச்த்தை தொட வாய்ப்பு உள்ளதால், நகை வைத்துள்ளவர்கள் அதை வைத்துக் கொண்டாலே பெரும் சேமிப்பு தான்.. எனவே தங்கத்தை தொலைத்துவிட வேண்டாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+