தியேட்டர் ஸ்நாக்ஸ் விலை: தாஜ் ஹோட்டலில் இட்லி 120 ரூபாய்.. கேட்க முடியுமா? திருப்பூர் சுப்பிரமணியம்
சென்னை: தியேட்டரில் தின்பண்டங்கள் விலை அதிகமாக இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய திருப்பூர் சுப்பிரமணியன், "தாஜ் ஹோட்டலில் பிளேட் இட்லி 120 ரூபாய்.. ஆனால் சாதாரண ஓட்டலில் 10 ரூபாய்.. ஏன் நீங்க 120 ரூபாய்க்கு விற்பனை செய்யுறீங்க என்று அங்க போய் கேட்க முடியுமா? என கூறினார். மேலும் இப்போது எல்லா தியேட்டர்களிலும் 190 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
தியேட்டர்களில் முதல் நாளில் டிக்கெட் அதிக கட்டணத்துக்கு விற்கப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதில் அளித்து கூறியதாவது:- எந்த ஊரில் அதிக விலைக்கு விற்கிறார்கள். எந்த ஊரிலும் 190 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்றது கிடையாது. நான் சேலஞ்சாகவே சொல்கிறேன்.

பெரிய நடிகர்களின் படம் வந்திருந்தால், ஸ்பெஷல் ஷோவிற்காக அதிகம் வைத்து விற்று இருக்கலாம். தியேட்டருக்கு வெளியில் விற்று இருக்கலாம். முன்னாடி மாதிரி கிடையாது. ஆன்லைனில் தான் இப்போ டிக்கெட் எடுக்குறாங்க.. எந்த தியேட்டரிலாவது 190 ரூபாய்க்கு அதிகமாக போட்டு இருக்காங்கலான்னு பாருங்க.. அப்படி விதிக்கப்பட்டிருந்தால் என்னிடம் சொல்லுங்க..
வாட்டர் மற்றும் தின்பண்டங்கள் விலை அதிகமாக இருப்பது பற்றி கூறுகையில், "இதற்கு பழைய உதாரணத்திற்கே போக வேண்டியதுதான்.. தாஜ் ஓட்டலுக்கு இட்லி வாங்க போனீங்க என்றால், அங்கு இட்லி 120 ரூபாய் ஒரு பிளேட் இட்லி. ஆனால் சாதாரண கடைக்கு போனீங்க என்றால் அங்கு 10 ரூபாய் தான்.. அப்போ, நீங்க தாஜ் ஓட்டலில் போய், ஒரே மாவு தான் ஊத்துறீங்க.. ஏன் 120 ரூபாய்க்கு கொடுக்குறீங்க என்று கேட்க முடியுமா..
சென்னையில் ஒரு ஓட்டலில் சாதா தோசை 900 ரூபாய்க்கு விற்குறாங்க.. இது உங்களுக்கு தெரியுமா? 900 ரூபாய் என்றாலும் சாப்பிடத்தான் செய்றாங்க.. உணவு பண்டங்களில் யாரு விலையை கட்டுப்படுத்த முடியும். அவங்க அவங்களுடைய நிர்வாக செலவுகள் அதையெல்லாம் வைத்து தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும். முன்னாடி சாதாரண உணவும் உண்டு, ஸ்பெஷல் உணவும் உண்டு" என்றார்.
புதிதாக வரும் திரைப்படங்களை விமர்சனம் செய்வது குறித்து பேசுகையில், "ஊடகங்கள் எல்லாம் வருவதற்கு முன்பு மக்கள் படம் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வார்கள். படம் நல்லாருக்கு என்றால் நல்லா இருக்கு. இது பேமிலி செண்டிமெண்ட்.. இது ஆக்சன் படம் என அவங்க சொல்வாங்க. 10 பேரிடம் படம் எப்படி இருக்குன்னு கேட்டால், 10 பேரும் ஒவ்வொரு மாதிரிதான் சொல்வாங்க.." என்றார்.
விமர்சனங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கருத்துரிமை அடிப்படையில் வருகிறது... கருத்துரிமையை தடுக்க முடியும் என்று நீங்க நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த திருபூர் சுப்பிரமணியன், "இதே கருத்துரிமையை நீங்க எல்லா இடத்துலேயேயும் காட்டுகிறீர்களா.. ஒரு ஜவுளிக்கடை முன்போ, ஓட்டல் முன்போ.. இந்த ஓட்டலில் சாப்பிடாதீங்க என்று உங்களால் சொல்ல முடியுமா..
ஊடகம் நடத்துறீங்க.. நிகழ்ச்சிகளும் நடத்துறீங்க.. நீங்க நடத்துற நிகழ்ச்சி பாக்காதீங்க.. இது ரொம்ப மட்டமாக இருக்கு என்று உங்களுடைய வாசலில் நின்று எங்களை சொல்ல விடுவீங்களா?.. ஒரு ஊடகத்தை பற்றி இன்னொரு ஊடகம் விமர்சனம் பண்றாங்களா?.. எங்க தியேட்டரில் உங்க ஊடகத்தின் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து நாங்க போட்டால் ஒத்துக்கொள்வீங்களா? நாங்க மட்டும் ஒத்துப்போகனும்.. நீங்க ஒத்துப்போக மாட்டீங்க.. அப்டித்தானே.." இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications