அண்ணாமலை விட்டிருக்க மாட்டாரே.. நயினார் பற்றி யோசிக்கலையே.. எடப்பாடி இப்படி பண்ணிட்டாரே!
சென்னை: நாங்கள் பாஜகவுடன் அமைக்கப்போவது கூட்டணி அரசு அல்ல. கூட்டணிதான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பாஜகவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் கூட்டணி குறித்து அதிமுக எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.
இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது.
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தலையிடப்போவதில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, இருவருக்குமே பலனளிக்கக் கூடியது; யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி பிறகுதான் பேச இருக்கிறோம்., ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம், என்றார்.
அதிமுக கூட்டணி ஆட்சி
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். ஆனால் ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம், என்று அமித் ஷா கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்கள் பாஜகவுடன் அமைக்கப்போவது கூட்டணி அரசு அல்ல. கூட்டணிதான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பாஜகவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். டெல்லிக்கு பிரதமர் மோடி.. தமிழ்நாட்டுக்கு நான்" என அமித்ஷா தெளிவாக கூறினார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம், என்று எடப்பாடி கூறியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் விவாதம்
அதிமுக அடுத்த முறை ஆட்சி அமைத்தால் பாஜக தயவின்றி ஆட்சி அமைக்க முடியாது. பாஜக கூட்டணி வாக்குகள் இன்றி ஆட்சி அமைக்க முடியாது. அப்படி இருக்க ஆட்சியில் பங்குதர மாட்டேன் என்று கூறுவது எப்படி சரியாகும் என்று பாஜக ஆதரவாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான். ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே பேசிக் கொள்வார்கள். பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு கிடையாது என்ற இபிஎஸ் கருத்துக்கு, நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
ஆனால் அண்ணாமலை ஆதரவு தரப்பினர் சிலர், அண்ணாமலை இதை இன்னும் வீரியமாக கையாண்டு இருப்பார். எடப்பாடி இப்படி எல்லாம் பேசி இருக்க முடியாது. அமித் ஷா அருகில் இருக்கும் போது எதுவும் சொல்லாத எடப்பாடி இப்படி இப்போது பேசுவது சரியல்ல.. இப்படி பேச அண்ணாமலை விட்டிருக்க மாட்டார்.. முக்கியமாக டெல்லி முடிவு எடுக்கும் அண்ணாமலை விட்டுப்போக கூட ஆள் இல்லை.. பதிலுக்கு அவரும் பேசி இருப்பார், என்று வாதம் வைக்கின்றனர். முக்கியமாக பாஜக தயவில் ஆட்சிக்கு வந்துவிட்டு.. ஆட்சியில் இடம் தர மாட்டேன் என்று எடப்பாடி சொல்ல முடியுமா.. அதற்கு 2026க்கு பின் டெல்லிதான் விட்டுவிடுமா என்றும் பாஜகவினர் வாதம் வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications