தவெக தப்பு பண்ணட்டும் விடுங்க... விஜய்யை உஷாராக வைக்கிறீங்களே.. ஸ்டாலினுக்கு திமுகவினர் கோரிக்கை
சென்னை: விஜய் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் சிறு தவறும் செய்யக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருபவர் ஒருவர் இருக்கிறார். இப்போது அவர், விஜய்க்கு சிறந்த அரசியல் ஆலோசகராகவும் மாறியுள்ளார் என்றால், அது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தான் என்று திமுகவினர் கூறுகிறார்கள். அத்துடன் தவெக தப்பு பண்ணட்டும் விடுங்க... அவர்கள் மக்கள் மத்தியில் எக்ஸ்போஸ் ஆகிவிடுவார்கள்.. ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கையும் விஜய்யை உஷாராக வைப்பதாக ஆதங்கப்படுகிறார். அதற்காக ஸ்டாலினுக்கு எதிராகவே மீம்ஸ் போடுகிறார்கள் திமுகவினர்.
தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பாக முதல் நாள் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார்... மறுநாளே அக்கவுண்டில் பணம் விழுகிறது.. அடுத்தாக மகளிர் உரிமை தொகை மே 15ம் தேதிக்குள் போட வேண்டும் என்று ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்புகிறார். மறுநாளே மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வங்கி கணக்குகளில் போடப்பட்டது.

முன்னதாக ஜோஷியர் பண்டிட் அரசு பணியில் அதுவும் முதல்வர் விஜய்க்கு ஆலோசகர் என்கிற ரீதியில் பதவியில் அமர்த்தப்பட்டார். இதுபற்றி விமர்சனங்களை வைத்தது திமுக தலைமை. இதனால் அடுத்த நாளே ஜோசியரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வர்கள் நாங்கள் என்கிற ரீதியில் விஜய் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கிறது. இதனால் எங்களால் தான் உரிமை தொகை கிடைத்தது. எங்களால் தான் அரசே இயங்குகிறது என்று திமுக தலைமை கூறிவருகிறது. ஆனால் இது எல்லாம் தேவை இல்லாத ஆணி என்று திமுகவினரே முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மீம்ஸ் போட்டு விமர்சிக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சனையும் நடப்பதற்கு முன்பே கூறுவதால், மக்கள் மத்தியில் பிரச்சனை போய் சேருவதற்கு முன்பே, அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பே கூறுவதால், விஜய் உஷராகிவிடுவதாக திமுகவினர் ஆதங்கப்படுகிறார். மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் அமைதியாக இருந்திருந்தால், அவர்களே மக்களிடம் அம்பலாகியிருப்பார்கள். அவர்களின் தவறுகளை எடுத்து சொல்லி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால், தவறுகளை நடக்கவிடாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தடுத்தால் எப்படி? என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒரு திமுக ஆதரவு நெட்டிசன், அவரு (ஸ்டாலின்) செஞ்சது அப்படியே நமக்கு கிடைக்குது இவரே தொடரட்டும் னு மக்கள் முடிவு பண்ணிட்டா என்ன செய்வீங்க? என்று திமுக தலைமையே கேள்வி எழுப்பி உள்ளதுடன், கொஞ்ச நாள் கம்முன்னு இருங்க.. பிறகு ஆட விட்டு அடிங்க " என்று கூறியுள்ளார். அதேபோல் ஆதவ் அர்ஜுனாவின் வாய்க்கு எல்லாம் கண்டிப்பாக மாட்டுவார்.. அதுஅவரை அமைதியாக இருங்கள் என்று திமுகவினர் சிலர் விமர்சிக்கிறார்கள். அதேபோல் ஒரு நெட்டிசன், "அவங்கள எப்பிடி ஆட்சி செய்ய வைக்கணும்ங்கிறது நம்ம கடமை இல்லை,
அவங்க ஆட்சில என்னன்ன கொடுமை நடக்குதுங்கிறது மக்கள்ட்ட எடுத்து சொல்றதுதான் நம்ம கடமை. சொன்னா புரிஞ்சுக்கோங்கயா." என்று கூறியுள்ளார்.
அதேநேரம் இவர்களின் இந்த அணுகுமுறையை மக்கள் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "நல்ல கட்சிக்கு அடையாளம் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து மக்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்வதுதான். நீங்கள் ஏன் அதிகார பசி கொண்டு குறுக்கு வழியில் செல்ல நினைக்கிறீர்கள்.. சாணக்கியத்தனமல்ல.. இது தவறு.. திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் களத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், விஜய் அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கழுகுப் பார்வையுடன் கவனித்து கொண்டு இருக்கிறது திமுக. ஒரு சிறிய தவறு நடந்தால்கூட உடனே அதைப் பிடித்து அரசியல் ஆயுதமாக மாற்ற தயாராக காத்திருக்கிறார்கள். அதனால் தான் விஜய் மற்றும் அவரது அணியும் தற்போது மிகவும் கவனமாக நகர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அரசியலில் பெரிய எதிரி இருப்பது சில நேரங்களில் பலவீனம் இல்லை. அது தவறு செய்யாமல் இருக்க வைக்கும் மிகப்பெரிய அழுத்தம்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications