தலைவரையே எதிர்த்து பேசுறியா? அண்ணாமலையை இடைமறித்த மூத்த "தலை".. பொங்கிய நிர்வாகிகள்.. என்ன நடந்தது?
பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவங்கள் பாஜகவினர் இடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: பாஜக மாவட்ட நிர்வாகிகள், அணி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதும் அவரை அண்ணாமலை ஆதரவாளர்கள் கோபமாக திட்டியதாக கூறப்படுகிறது,
நேற்று இந்த கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டத்திற்கு எதிராக அண்ணாமலை பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பாஜக அதிமுக இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த மோதல் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த பின் உச்சம் அடைந்தது. இந்த நிலையில்தான் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை முக்கியமான சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொன்னார்?
அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

சலாம்
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

மூத்த தலைவர்
அண்ணாமலை இப்படி ராஜினாமா செய்வேன் என்று கூறியதும் நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம். இதை கேட்டதும் அமர் பிரசாத் ரெட்டி, கரு நாகராஜன் உள்ளிட்டோர் ஷாக் ஆகி உள்ளனர். அவர்கள் உடனே குறுக்கிட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சை கேட்டதும் அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள் வேண்டாம்.. வேண்டாம் என்று குறிப்பிட்டு பேசி உள்ளனராம். இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர். பாஜகவில் அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கும் இன்னும் சில நிர்வாகிகளும் இதே சொல்லி இருக்கிறார்கள்.

புரியவில்லை
ஆனால் சிலர் அண்ணாமலையின் பேச்சு புரியவில்லை என்று விளக்கம் கேட்டு உள்ளனர். முக்கியமாக மூத்த நிர்வாகி ஒருவர் நீங்க என்ன பேசுறீங்க.. விளக்கமா சொல்லுங்க என்று கேட்டுள்ளார். இதை கேட்டதும் பாஜக அண்ணாமலை ஆதரவாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர். உடனே அவரை மறித்து.. என்ன தலைவரையே எதிர்த்து பேசுறியா.. அவர் பேசிக்கிட்டு இருக்கார்ல என்று கூறி இருக்கிறார்கள். இதனால் அங்கே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications