இந்துவாக மாறியது ஏன்? விரட்டி விரட்டி காதலித்த பாபு? பாத்திமா பாபு லவ் ஸ்டோரி?
சென்னை: முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பாத்திமா எப்படி காதல் திருமணத்திற்குப் பிறகு முழு இந்துப் பெண்ணாக மாறினேன் என்பதைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்தக் காலத்தில் 24X7 செய்தி சேனல்கள் நிறைய வந்துவிட்டன. ஆனால்,1980களில் எல்லாம் நாடு முழுதும் ஒரே நியூஸ் சேனல்தான். தூர்தர்ஷனை விட்டால் வேறு வழி கிடையாது. அந்தக் காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்கள் ஒரு சினிமா நடிகைக்கு இணையாக ஸ்டார் அந்தஸ்தில் வலம் வந்தார்கள். அப்படி வலம் வந்தவர் பாத்திமா. அவருக்கு தமிழ்நாடு முழுக்க ரசிகர்கள் இருந்தார்கள்.

அப்படியான நேரத்தில் அவர் எந்தப் பிரபல பின்புலமும் இல்லாத பாபு என்பவரை காதல் மணம் புரிந்து கொண்டார். அப்போது அது மிகப்பெரிய செய்தியாகப் பார்க்கப்பட்டது. யார் இந்தப் பாபு? இவரை ஏன் தேர்வு செய்தார்? எனப் பல கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஆனால், இந்த ஜோடி எந்த சேதமும் இல்லாமல் கடந்த 35 வருடங்களாக குடும்ப வாழ்க்கையில் மிகச் சிறந்த முன் உதாரணமாக வாழ்ந்து காட்டி உள்ளனர்.
இவர்களின் காதல் எப்படி மலர்ந்து? அந்தக் காலகட்டத்தில் காதல் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததா? எனப் பல சந்தேகங்களுக்கு இப்போது பாத்திமா மற்றும் பாபு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளனர். ஒரு யூடியூப் சேனலுக்கு பாத்திமா பேசுகையில், "ஒரு பெண் தனக்கு கணவனாக வரப் போகின்றவர் எப்படி இருக்க வேண்டும் என மனதிற்குள் சில விசயங்களைப் பட்டியல் போட்டு வைத்திருப்பாள். அப்படி என்னிடமும் ஒரு பட்டியல் இருந்தது. அதன்படி பார்த்தால் அதில் ஒரு விசயம் கூட பாபுவுடன் பொருந்திப் போகவில்லை. ஆனாலும் அவரைக் கல்யாணம் செய்து கொண்டேன். அதற்குக் காரணம் இவர் ஒரு நல்ல மனிதர்" என்கிறார் பாத்திமா.
இவரைத் தொடர்ந்து பேசிய பாபு, "இந்தியன் ஆயிலில் நானும் பாத்திமாவும் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தோம். அங்கே அதிகம் பழகியது இல்லை. இவர் டேபிள் டென்னிஸ் ஆடிக் கொண்டிருப்பார். அதை நான் சும்மா நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது இவர் செய்தி வாசிக்கவில்லை. 87இல் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் செய்தி வாசிக்கப் போனார்" என்கிறார்.
இவர்கள் ஒரே இடத்தில் வேலை செய்திருந்தாலும் தொடக்கத்தில் காதல் ஒன்றும் இல்லையாம். ஒருமுறை விடுமுறைக்காக பாத்திமா அவரது சொந்த ஊருக்குப் போகும்போதுதான் அவரது பிரிவை பாபு உணர்ந்துள்ளார். உடனே பாத்திமா போகும் பேருந்தை பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போதுதான் இவர் காதலை உணர்ந்தேன் என்கிறார்.
அடுத்து பேசிய பாத்திமா, "நான் வணிகவியல் பட்டம் பெற்றேன். படித்தது முழுக்க பாண்டிச்சேரிதான். நானும் பாபுவும் ஒன்றாகத்தான் இந்தியன் ஆயில் கம்பெனியில் நேர்காணலுக்குப் போனோம். ஒன்றாகவே வேலைக்குச் சேர்ந்தோம். ஆறு மாதம் வரை தற்காலிக பணிநியமனம் கிடைத்தது. அதன்பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டோம். அப்போது மாதம் 532 ரூபாய் சம்பளம்" என்கிறார்.
இருவருக்கும் இடையேயான காதல் எப்படி மலர்ந்தது? அதை எப்படி பாபு வெளிப்படுத்தினார்? என்பது பற்றி பேசுகையில், "ஒரு நாள் நான் டேபிள் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு டைரியை என் பார்வையில் படும்படி வைத்தார். அதைத் திறந்து பார்த்தால், இருவரும் சேர்ந்து வாழலாம் என்பதைப் போல சில வரிகளை அதில் எழுதி இருந்தார். அதைப் படித்துவிட்டு உடனே கோபத்தில் திட்டிவிட்டு நகர்ந்தேன். அதைக் கேட்டு இவர் மயங்கி விழுந்துவிட்டார்.
ஆனால், நான் அங்கு இல்லை. வெளியே போய்விட்டேன். அவர் விழுந்தது தெரியாது. அங்கே இருந்த சக ஊழியர்கள் இவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். நான் போய் பார்த்தேன். அப்போது டாக்டர் என்ன நடந்தது என விசாரித்தார். இவரைப் பற்றி எனக்குத் தெரியும். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கும்போதே என்னை இந்தியன் ஆயில் அலுவலகம், செய்தி வாசிக்க தூர்தர்ஷன் அலுவலகம் என எல்லா இடத்திற்கும் இவர்தான் என்னை பைக்கில் அழைத்துக் கொண்டு போவார். அப்போது கோபம் வந்தால் இவர் உடனே மயங்கிவிடுவார். அதை வைத்து டாக்டரிடம் இவர் டென்ஷன் ஆனால் மயங்கிவிடுவார் என்று சொன்னேன். உடனே அவர் 'அப்படி என்றால் ஏன் டென்ஷன் வர மாதிரி நடந்து கொள்கிறீர்கள்?' என்று கேட்டார். அப்போதுதான் நான் முடிவு செய்தேன். இவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்களுக்குக் கல்யாணம் ஆன பிறகு பலர் 'தமிழ்நாடே உங்களைக் காதலித்தது. நீங்கள் ஏன் பாபுவை கல்யாணம் செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'என்னிடம் யாரும் சொல்லவில்லை. பாபு மட்டும்தான் காதலைச் சொன்னார்' என்று திரும்பப் பதில் கொடுத்தேன்" என்கிறார்.
இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 35 வருடங்களாகி விட்டன. பாத்திமா ஒரு இஸ்லாமியர். பாபு இந்து. ஆகவே பாத்திமா அம்மாவைத் தவிர வீட்டார் யாரும் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை. எனவே இந்த ஜோடி பதிவு திருமணம் செய்துள்ளனர். பாபு வீட்டிலும் மதத்தைச் சொல்லி தடை போட்டுள்ளனர். அவரது குடும்பம் வள்ளலாரை வழிபட்டு வருகிறது. ஜாதி, மதம் இல்லை என்பதே அதன் வழிபாடு. அதை வீட்டில் சொல்லி சம்மதம் பெற்றுள்ளார் பாபு. மேலும் இவர்களின் காதல் பற்றி ஒரு பத்திரிகை செய்தி போட்டுவிட்டது. மேலும் பின் வாங்க முடியாது எனக் கூறி விடாப்பிடியாக நின்று பாத்திமாவை மணந்துள்ளார் பாபு.
"நான் பாத்திமாவை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்னால் இவளை டிவியில் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்கள் 'நிலா மாதிரி இருக்கா' என்று என்னிடமே சொல்வார்கள். நான் அதற்குப் பதிலே சொன்னதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் என்ற செய்தி வெளியான பிறகு, 'அடப்பாவி, இதுவரை வாயை மூடிக்கிட்டு இருந்தீயே? உன்கிட்டயே அவளை வர்ணித்திருக்கிறேனே?' என்று ஆதங்கப்பட்டார்கள்" என்கிறார்.
இஸ்லாமியப் பெண்ணாக இருந்த பாத்திமா இப்போது பொட்டு, தாலி எல்லாம் போட்டு முழு இந்துவாகவே மாறி இருக்கிறார். அது பற்றிச் சொன்ன பாத்திமா, "கல்யாணம் போது தாலி கட்டவில்லை. பொட்டும் வைத்தது இல்லை. அவரும் என்னை இந்த மதத்தைப் பின்பற்று எனச் சொன்னதில்லை. நானும் சொன்னதில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு பொட்டு வைக்க எனக்குப் பிடித்தது. தாலி அணியவும் விரும்பினேன். எனக்குப் பிடித்ததால் அதைச் செய்தேன்" என்கிறார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications