முக்கிய பொறுப்புகளுக்கு பதவி நீட்டிப்பு செய்த பாஜக? புதிய ஆட்சிக்கு வழிவிட முடிவு? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய அளவில் பல்வேறு பதவிகளுக்கு புதிய நியமனங்களை மேற்கொள்ளாமல் பதவிக்காலத்தை மத்திய பாஜக அரசு நீட்டித்து வருகிறது. பாஜகவின் இந்த செயல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. . 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.

Why BJP is not making new appointments for bigger posts in Union Government

பதவி நீட்டிப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய அளவில் பல்வேறு பதவிகளுக்கு புதிய நியமனங்களை மேற்கொள்ளாமல் பதவிக்காலத்தை மத்திய பாஜக அரசு நீட்டித்து வருகிறது. பாஜகவின் இந்த செயல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

உதாரணமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத்தின் பதவிக் காலத்தை இந்திய அரசு மே 31, 2025 வரை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. 1 ஆண்டுக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் நேற்று முதல்நாள் கடைசி நிமிட ஆச்சரியமாக, பிரதமர் நரேந்திர மோடி அரசு இராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கி உள்ளது. அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை நியமிப்பதற்குப் பதிலாக இவரின் பணி நீட்டிக்கப்பட்டு உள்ளது. வயதில் மூத்தவர் அடிப்படையில்தான் பதவி வழங்கப்படும்.

ராணுவ தளபதி: துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை வயது அடிப்படையில் நியமித்து இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு இராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கி உள்ளது.

முன்னாள் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷா 6 மாத காலம் ராணுவத் தளபதியாக இருந்தபோது 1975ல் கடைசியாக இதுபோன்ற நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஜெனரல் பாண்டேவுக்கு வழங்கப்பட்ட இந்த நீட்டிப்பு அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. அடுத்த பதினைந்து நாட்களில் புதிய அரசு பதவியேற்கும் நிலையில் இந்த நீட்டிப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த இராணுவத் தளபதியை நியமிப்பதில் அரசாங்கம் வெறும் சீனியாரிட்டி மட்டுமே இத்தனை காலம் அடிப்படையாக வைத்து இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி சீனியாரிட்டியை அடிப்படையாக வைக்காமல் திடீரென பதவி நீட்டிப்பு செய்தது பல விதமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் நீட்டிப்பு; பொதுவாக இராணுவ தளபதி நியமனம், டிஆர்டிஓ நியமனம் எல்லாம் பதவிக்காலம் முடியும் 1 மாதம் முன்பே புதிய தலைவர் பற்றி அறிவிப்பு வெளியாகும். இல்லையென்றால் தேர்தல் சமயம் என்றாலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

இதற்கு முன் தேர்தல் சமயத்தில் இது போன்ற இராணுவ தளபதி நியமனம், டிஆர்டிஓ நியமனம் போன்ற பாதுகாப்பு தொடர்பான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் இந்த முறை புதிய நியமனங்களை மேற்கொள்ளாமல் பதவிக்காலத்தை மத்திய பாஜக அரசு நீட்டித்து வருகிறது. பாஜகவின் இந்த செயல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக புதிய அரசாங்கத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் விதமாக இப்படி செய்ய தொடங்கி உள்ளது. ஏன் பாஜக இப்படி செய்ய தொடங்கி உள்ளது. எதை "உணர்ந்து" நியமனங்களை தள்ளி போடுகிறது. புதிய கட்சி ஆட்சிக்கு வரும் என்று நினைக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதாவது புதிய ஆட்சி வந்து அவர்கள் நிரந்தர நியமனங்களை மேற்கொள்ள பாஜக வழிவிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சில மாதங்கள் பணிகள் தொடர்ந்து முறையாக நடக்க, பாஜக கொஞ்சம் அமைச்சரவை நியமனம் வரை ஆசுவாசமாக இருக்க பதவி நீட்டிப்பு செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+