நேரடியாக வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு ரூ.1000? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1000ஐ வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்படும். எப்போதும் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும்.
இதில் 2022இல் பொங்கல் பரிசுத் தொகை இல்லாமல், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என 21 பொருட்களைக் கொண்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் பரிசு சில இடங்களில் தரமற்று இருந்ததாகப் புகார் எழுந்தன.

பொங்கல் பரிசு
இந்தச் சூழலில் இந்தாண்டு பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கப்பட உள்ளது. முதலில் இந்தத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கரும்பையும் இந்தத் தொகுப்பில் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
இந்த பொங்கல் பரிசுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தைச் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 9ஆம் தேதி தொடங்கி வைக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பொங்கல் பரிசில் வழங்கப்படும் ரூ.1000 குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளது.

பொதுநல வழக்கு
தஞ்சாவூர் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் பொங்கல் பரிசு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். பொங்கல் பரிசுப் பொருட்களைத் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இது தொடர்பான விசாரணை நடைபெற்ற போது மனுதாரர் தரப்பில், ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகையைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வங்கிக் கணக்கில்
இதற்குத் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "வங்கிகளில் குறைந்தபட்ச தொகை இல்லை என்று கூறி வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் திட்டத்தின் முழுமையான பலன் மக்களுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது" என்று பதிலளித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, பொங்கல் விழாவுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.

தமிழக அரசுக்கு உத்தரவு
மேலும், தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடந்து வருவதைக் குறிப்பிட்ட நீதிபதி, அதேபோல ரேசன் கார்ட் உடன் வங்கிக் கணக்கை இணைக்கலாம் என்றும் அதன் பின்னர் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே எனக் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசிடம் உரிய இது குறித்து உரிய விளக்கத்தைப் பெற்றுப் பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு விசாரணையை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications