சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இனி ஆக்கிரமிக்கவே முடியாது.. மாஸ்டர் பிளான்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் அரசு அதிகாரிகள், ஆக்கிரமிப்புகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்காக அண்மையில் கோடிகளை கொட்டி ஒரு இணையதளமே தொடங்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் தடுப்பதும், மறுசீரமைப்பு செய்வதும் இனி மிகவும் எளிது என்கிறார்கள் அதிகாரிகள்.
மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, ஆக்கிரமிப்பு மிக அதிகமாகக் கண்டறியப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களின விவரம் உத்தரப் பிரதேசம் (15,213), தமிழ்நாடு (7,828), தெலங்கானா (2,748), ஆந்திரப் பிரதேசம் (2,733), மத்தியப் பிரதேசம் (1,765). இதில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.

சென்னையில் ஆக்கிரமிப்புகள்
குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைசி பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லை பகுதிகள் ஆக்கிரமிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள் அதிகமாக ஆக்கிரமிப்புக்கு ஆளாகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீர்நிலைகளை காக்க அரசு புதிய நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
மத்திய அரசு இணையதளம்
மத்திய நீர்வள ஆணையம், இந்திய வானிலை மையம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து புதிதாக இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த இணையதளம் மூலம் மாநிலத்தின் நீர் தேவை, கிராமங்களில் தண்ணீர் வரவு-செலவு, குடிநீர் பற்றாக்குறை நிலவரம், அணைகளுக்கு நீர்வரத்து முன்னறிவிப்பு, நிலத்தடி நீர் தகவல், ஆறுகளுக்கு இடையே நீர் பரிமாற்றம் போன்ற தகவல்களை பார்க்க முடியும். இந்த இணையதளத்திற்காக மத்திய அரசு ரூ.30 கோடி செலவிட்டுள்ளது.
கண்காணிக்க முடியும்
இதேபோல, செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பதற்கு 'tnwip.tn.gov.in'என்ற இணையதள சேவை ரூ.2.55 கோடி ஒதுக்கி உருவாக்கி உள்ளது. இதன் மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவு இழப்பையும் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல்களையும் அனுப்பி வைக்க முடியும். இந்த 2 இணையதள சேவைகளையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்துள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் வாயிலாக புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீரின் இருப்பு, தரம் ஆகியவற்றை அரசால் எளிதாக கண்காணிக்க முடியும். அத்துடன் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் முடியும்.
நீர்நிலைகள் புனரமைப்பு
மேலும் நீர்நிலைகளை புனரமைக்க முன்கூட்டியே திட்டமிட முடியும். ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் நீர்பிடிப்பு பரப்பளவு ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து, ஆதாரபூர்வ முடிவெடுக்க முடியும் என்பதால், இத்திட்டம் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். மழை காலங்களில் அதிகாரிகளுக்கு தானாக எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பி விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications