"டெல்லிக்கு பறந்த பஞ்சாயத்து".. இங்கே ஸ்டாலின் போட்ட மீட்டிங்! எடப்பாடி கனவை கலைக்கும் ராகுல் காந்தி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிமுக + காங்கிரஸ் கூட்டணி தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் குறித்த செய்திகள் கவனம் பெற தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று பேச்சுக்கள் தீவிரம் அடைந்து உள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த பேச்சு தமிழ்நாடு அரசியலில் உலவி வருகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம்.
கே எஸ் அழகிரி பதவிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காங்கிரசில் புதிய தமிழ்நாடு தலைவர் நியமிக்கப்படவில்லை. இது டாப் நிர்வாகிகள் பலர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

புகார் - தலைவர் மாற்றம்
இந்த நிலையில்தான் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆட்களுக்கும், கே.எஸ் அழகிரி ஆட்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் மண்டை உடைக்கும் அளவிற்கு சண்டை முற்றியது. காங்கிரஸ் வட்டார தகவல்களின்படி கே.எஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே கே.எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லியில் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர் .

டெல்லி
செல்வப்பெருந்தகை தலைமை தங்கபாலு, இளங்கோவன் மற்றும் அவரின் ஆட்கள் என்று பெரும் படையே டெல்லிக்கு சென்றது. இவர்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். இதில் கே.எஸ் அழகிரி குறித்து இவர்கள் சரமாரி புகார்களை வைத்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் நியமனங்கள் தவறாக நடக்கின்றன. கட்சியில் தட்டிக்கேட்டால் மோதல் ஏற்படுகிறது. சமீபத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலுக்கு கே. எஸ் அழகிரிதான் காரணம் என்று புகார் வைத்ததாக கூறப்படுகிறது.

ரேஸில் இருக்கும் தலைவர் - அழகிரி திமுக
இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் உறுதி என்கிற நிலையில், தலைவர் பதவியை கைப்பற்ற பலரும் இப்போதே மறைமுக முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இதற்காக பல்வேறு பெயர்கள் அடிபட்டு வருகின்றன. செல்வப்பெருந்தகை இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். ரூபி மனோகரனும் தலைவராக தீவிரமாக முயன்று வருகிறார். சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் பெயர் கூட தலைவர் பதவிக்கான பெயரில் அடிபட்டது. ஜோதிமணி பெயரும் தலைவருக்கான ரேஸில் அடிபட்டது. இந்த ரேஸில் மிக முக்கியமானவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான மாணிக்கம் தாக்கூர் எம்.பி.! இது குறித்த தனது விருப்பத்தை சமயம் பார்த்து ராகுலிடம் மெல்ல சொல்லியிருந்திருக்கிறார் அவர்.

திமுகவுடன் நெருக்கம் - கண்டிப்பு
அதிமுக + காங்கிரஸ் கூட்டணி தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் குறித்த செய்திகள் கவனம் பெற தொடங்கி உள்ளன. முக்கியமாக திமுகவுடன் நெருக்கம் காட்டும் தலைவரை டெல்லி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ் அழகிரிக்கு - திமுகவிற்கு கடைசி கட்டத்தில் உறவு சுமுகமாக இல்லை. இதனால் திமுகவுடன் நட்பாக செல்லும் , அதே நேரம் திமுகவிடம் இடம் கேட்பதில் கறாராக இருக்கும் தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் மீட்டிங்
டெல்லியில் நடந்த திருநாவுக்கரசர் செல்ல வேண்டியதாகி இருந்தது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார். இதனால் அவரால் செல்ல முடியவில்லை. இங்கே ஸ்டாலின் நடத்திய மீட்டிங்கிற்கு இடையில்தான் டெல்லியில் காங்கிரஸ் மீட்டிங்கும் நடந்து இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக லேசாக முயன்று வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாகவே அமித் ஷாவை சென்னை வரும் போதெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி கூறியதாக விவாதிக்கப்பட்டது.

ராகுல் காந்தி தயாரில்லை
அதாவது பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைத்துவிட்டு, காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்று அதிமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் அரசியல் ஆலோசகர் ஒருவர் இதற்கான முயற்சிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ராகுல் காந்தி திமுகவுடன் கூட்டணியை முறிக்க தயாராக இல்லை என்றும். ஸ்டாலினுடன் நட்பு தொடர வேண்டும் என்று விரும்புகிறார். மற்ற மாநில தலைவர்கள் கைவிட்ட போதும் ஸ்டாலின் தன்னை கைவிடவில்லை. அதனால் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று ராகுல் ஜி விரும்புகிறார் என்கிறார்கள் டெல்லி கதர் வட்டாரத்தினர்!












Click it and Unblock the Notifications