லிப்ஸ்டிக் காரணம் இல்லையாம்.. மாநகராட்சி பெண் தபேதார் இடமாற்றம் ஏன்? பின்னணி தகவல்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக பணியாற்றிய மாதவி திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணியிடமாற்றத்துக்கு லிப்ஸ்ட்டிக் பூசி வந்தது தான் காரணம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதனை சென்னை மாநகராட்சி மறுத்துள்ள நிலையில் மாதவியின் பணியிட மாற்றத்தின் பின்னணியில் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் இடையேயான பிரச்சனை தான் காரணம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக நியமிக்கப்பட்டவர் மாதவி. இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் மேயர் பிரியாவுக்கு தபேதாராக பணியாற்றி வந்தார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் மாதவி செல்வார்.

இந்நிலையில் தான் தற்போது மாதவி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மேயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மாதவி மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது மாதவிக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இவர் அதிகளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தியதாகவும், அதனை மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் மாதவி தனது லிப்ஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தாததால் தான் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இத சர்ச்சையையும் கிளப்பியது.
இதையடுத்து இன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் மாதவி லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதை மேயர் பிரியாவின் அலுவலகம் தரப்பில் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. மேயர் பிரியா அலுவலகம் சார்பில், மாதவி பணிஇடமாற்றத்துக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தியது தான் காரணம் என கூறுவது தவறானது.
அவர் உரிய நேரத்திற்கு பணிக்கு வராதது, சீனியர்களின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களால் மாதவிக்கு மெமோ அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. பணியை சரிவர செய்யாத காரணத்தால் தான் மெமோ கொடுக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதன்மூலம் மாதவியின் பணியிடமாற்றத்துக்கு லிப்ஸ்டிக்கை காரணம் சொல்ல முடியாது என மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மாதவி ஏன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும், துணை மேயர் மகேஷ் குமார் இடையே பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை என்பது வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும் கூட இருவருக்கும் இடையே மனக்கசப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மேயர் பிரியாவின் அறையில் நடக்கும் விஷயங்களை மாதவி துணை மேயர் மகேசுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது மேயர் பிரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications