இருக்கு இல்லை! மாறி மாறி வீடியோ? Eat Right Chennai பேட்ஜுடன் அதிரடி செய்த சதீஷ்குமார் இடமாற்றம் ஏன்?
சென்னை: சென்னை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்படாதவை. அவை என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார். இவரது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால்தான் உணவு பாதுகாப்பு, அதற்கென அதிகாரி இருப்பது, அவருக்கு தகவல் கொடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் சென்னையில் எந்த ஹோட்டலில் உணவில் குளறுபடி என்றாலும் புகாரின் பேரில் அங்கு சதீஷ்குமார் போய் விசாரணை நடத்தி தவறு இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுத்து வந்தார்.
கோடை காலம்
அந்த வகையில்தான் கோடை காலமான தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தி அதன் நிறத்தை மாற்றவும் இனிப்பை கூட்டவும் செய்வதாகவும் கூறி சதீஷ்குமார் தெரிவித்திருந்தார். மேலும் தர்பூசணி பழங்கள் ஏப்ரல், மே மாதங்களில்தான் பழுக்கும் என்பதால் தற்போது வாங்க வேண்டாம் என்றும் மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
தர்பூசணி விற்பனை
இதனால் தர்பூசணி விற்பனை பாதிப்படைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த சதீஷ்குமார், தர்பூசணியில் ரசாயன ஊசி செலுத்தப்படவில்லை என்றும் அது போன்ற பழங்கள் சென்னையில் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், தர்பூசணியில் கலப்படம் இல்லாததால் அதை தாராளமாக சாப்பிடலாம் என்றும் சதீஷ்குமார் தெரிவித்திருந்தார்.
விவசாயிகள் அதிர்ச்சி
இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வீடியோ போட்டுவிட்டு தற்போது அப்படி கலப்படம் ஏதும் இல்லை என அதிகாரி சதீஷ்குமார் சொல்கிறார். எனவே சதீஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
கிலோ ரூ 15
தர்பூசணி ஒரு கிலோ ரூ 15-க்கு விற்பனையாகி கொண்டிருந்த நிலையில் சதீஷ்குமாரின் வீடியோவால் கிலோ ரூ 2-க்கு கொடுத்தால் கூட வாங்க ஆளில்லாத நிலை ஏற்படுகிறது. அவர் கார்ப்பரேட் குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
தர்பூசணி கலப்படம்
தர்பூசணியில் கலப்படம் என்பது ஒன்றிரண்டு இடங்களில்தான் நடப்பதாக சதீஷ்குமார் சொல்லும் நிலையில் அது எங்கே நடக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். சர்க்கரை பாகை தர்பூசணியில் ஊசி மூலம் ஏற்றுவதாக சொல்கிறார்.
சர்க்கரையின் விலை என்ன?
சர்க்கரையின விலை என்ன என சதீஷ்குமாருக்கு தெரியுமா, எதற்காக விவசாயிகள், ஏழை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கிறார், இவரது வீடியோவால் 2000 ஏக்கர் தர்பூசணி பழங்கள் வாங்க ஆளில்லாமல் அழுகும் நிலையில் உள்ளது. விளம்பரத்திற்காக வீடியோகிராபர்களை அழைத்து கொண்டு சோதனை செய்வது போல் அவர் நாடகமாடுவதாகவும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
பிலால் ஹோட்டல் பீப் பிரியாணி
அது போல் அண்மையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் ஓட்டலில் பிரியாணி மற்றும் சவர்மா சாப்பிட்ட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர்கள் அனைவரும் பீப் பிரியாணி, பீப் சவர்மா சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
என்ன காரணம்
இந்த நிலையில் அவர்களது உடல்நலம் பாதிப்புக்கு கெட்டு போன உணவுதான் காரணம் என ராயப்பேட்டை மருத்துவர்கள் சான்று அளித்ததாக போலீஸார் தெரிவித்திருந்தனர். இதனால் திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் ஆய்வு நடத்தி ஹோட்டலுக்கு பூட்டு போட்டார். அது போல் கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் கேட்கப்படும் என சதீஷ்குமார் தெரிவித்திருந்தார்.
இடமாற்றம் ஏன்
இந்த நிலையில்தான் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாவட்டத்தை திருவள்ளூர் மாவட்ட அதிகாரி போஸ் சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சதீஷ்குமார் இடமாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவரது இடமாற்றம் நிர்வாக ரீதியில் நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. Eat Right Chennai என்ற பேட்ஜுடன் எப்போதும் ரெய்டு நடத்துவார் சதீஷ் குமார்!
-
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications