வேற லெவலில் மாறிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..இது ஒன்று மட்டும் தான் வெயிட்டிங்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஐந்து ஏக்கர் நிலத்திற்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அங்கு அங்குள்ள புறநகர் ரயில் நிலையத்தை இணைக்க மேம்பாலப் பணிகளுக்காக கூடுதலாக ஐந்து ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்காகவே பேருந்து நிலையம் தற்போது காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர் பேருந்து வாகனங்களால் நகரம் கடும் நெரிசலில் சிக்கிவிடுகிறது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

எப்படி அமைந்துள்ளது
புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டது. இப்போது பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

திருச்சி
இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என கூறப்படுகிறது.

பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், கடந்த பொங்கல் பண்டிகைக்கே திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், திறக்கப்படவில்லை. இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதற்கான தேதிகள் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.

கழிவறை வசதிகள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானம் தொடர்பான அனைத்து பணிகளும் வரும் மார்ச் இறுதியில் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. தற்போது அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், உணவகம் உள்ளிட்ட வசதிகளை செய்யப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய மேம்பாலம்
இந்நிலையில் புதிய மேம்பாலம் அமைக்க ஐந்து ஏக்கர் நிலத்தை சென்னை மாநகராட்சி மேம்பாட்டுக் கழகம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாம். அதனால் தான் பேருந்து நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதாம்.

சிஎம்டிஏ
இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த மாநகராட்சிப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், தேவைப்படும் நிலங்கள் குறித்த விவரத்தை சிஎம்டிஏவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். இது தவிர்த்து, பேருந்து நிலையத்தின் முன்பக்க நுழைவுவாயில் அருகே சர்வீஸ் சாலையுடன் இணையும் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவும் கூடுதல் நிலம் தேவைப்படுகிறது என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை
இதனிடையே, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தையும் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு திட்டம் நீட்டிக்கப்பட்டால் 2025 - 26ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையவும் வசதி ஏற்படுத்தப்படும்.அதே நேரம் ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே புறநகர் ரயில் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications