5 ரூபாய் டிக்கெட்.. திடீர்னு மெட்ரோ ரயில் ஆஃபர் ஏன்? பயன்படுத்துவது ரொம்பவே ஈசி - மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என அறிவித்து உள்ளது ஏன்? விரிவாக பார்ப்போம்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ 5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17 ஆம் தேதி அன்றும் பயணிக்கலாம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03 12 2023 அன்று க்யூ ஆர் பயணச் சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்தபயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ 5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக (03 12 2023) அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற 17 12 2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இந்த சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ 5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Pay tm; Whatsapp and Phone Pe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச் சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.
இப்போதைக்கு தர முடியாது.. 2 வருடமாக சல்லி காசு கொடுக்காத மத்திய அரசு.. சென்னை மெட்ரோ 2.0 முடக்கம்?
பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொது மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications