சீனாவை உலுக்கி போட்ட கொரோனா.. ஆனால் இந்தியாவில் சத்தமே காணோமே.. டேட்டா சொல்வது என்ன?
சென்னை: சீனாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் இந்தியாவிலும், தமிழ்நாட்டில் பெரிதாக கொரோனா கேஸ்கள் உயரவில்லை.
சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. அங்கு தினசரி கேஸ்கள் 1 கோடியை தாண்டி உள்ளது. மக்கள் பலர் சாரைசாரையாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிதாக உயரவில்லை என்றாலும் கொரோனா ஓயவில்லை.. எச்சரிக்கையாக இருப்போம்.. எந்த சூழலையும் எதிர்கொள்வோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தனது ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா
மேலும் இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் 3,552 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா கேஸ்கள்
சீனாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், தமிழ்நாட்டில் பெரிதாக கொரோனா கேஸ்கள் உயரவில்லை. இந்தியாவிலும் தேசிய அளவில் கொரோனா கேஸ்கள் குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இது தொடர்பாக கொரோனா டேட்டா வல்லுனர் விஜயானந்த் செய்துள்ள போஸ்டில், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் குறைவாகவே பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

தமிழ்நாடு கேஸ்கள்
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 188 கேஸ்கள் தினமும் சராசரியாக பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா கேஸ்கள் மிகவும் குறைவாகவே பதிவாகி உள்ளது. 11 கேஸ்கள் நேற்று பதிவானது. இதில் சென்னையில் 5 கேஸ்கள் பதிவானது. சென்னையில் 4977 பேர் சோதனை செய்யப்பட்டனர். இதில் இவ்வளவு குறைவாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பு சதவிகிதம் வெறும் 0.2 என்று அளவில்தான் உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சொன்னார்?
முன்னதாக கொரோனா கேஸ்கள் சீனாவில் அதிகரிப்பது தொடர்பாக கோவிட் டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், சீனாவில் கொரோனா பிரச்சனை தொடங்கி உள்ளது. இது இந்தியாவை தாக்குமா என்று கேட்டால்.. இல்லை என்பதுதான் பதில். சீனாவில் கொரோனா தொடங்க மெயின் காரணம் என்றால் அங்கே ஜீரோ கோவிட் விதிகளை பின்பற்றியதுதான். அதாவது ஒருவருக்கு கொரோனா வந்தாலும் அவருடன் இருந்தவர்களை எல்லாம் மொத்தமாக தனிமைப்படுத்துவார்கள். இதுதான் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட காரணமாக இருந்தது. கொரோனா பலருக்கும் அப்போது பரவவில்லை.

உயருமா
தற்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தி உள்ளனர். அப்போது தப்பித்தவர்கள் எல்லாம் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இதனால் கொரோனா பரவ சான்ஸ் இல்லை. சீனாவில் இப்போதுதான் ஒமிக்ரான் பரவல் ஏற்பட்டு உள்ளது. ஒமிக்ரான் பிரிவின் கிளை வேரியண்ட்களான BA.2.75, BA.5, BQ.1 , XBB ஆகியவைதான் சீனாவில் பரவுகிறது. இதெல்லாம் ஏற்கனவே இந்தியாவில் இருந்தவைதான். நம்மிடையே ஏற்கனவே இதற்கு இம்யூனிட்டி உள்ளது. இந்த வேவ் ஏற்கனவே முடிந்துவிட்டது, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications