Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தங்கம்’ வீட்டு விசேஷத்துக்கு போகாமல் சென்னை பறக்கும் ஸ்டாலின்.. ‘ஷாக்’ காரணம்.. பரபர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 20ஆம் தேதி தேனி கம்பத்தில் நடைபெற உள்ள தங்க தமிழ்ச்செல்வனின் மகள் திருமண விழாவிற்கு செல்லும் திட்டத்தைக் கைவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்பது குறித்த பின்னணி தகவல்கள் கசிந்துள்ளன.

அதிமுகவில் எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அக்கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் தேனி எம்.பி தொகுதியில் நின்று தோல்வியடைந்தார்.

Why CM Stalin did not participate in wedding of Thanga Tamil Selvans daughter in Theni?

தங்க தமிழ்ச்செல்வன் இல்ல திருமணம்: பின்னர் திமுக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை பெற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் மகள் சாந்தினியின் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 9 மணிக்கு கம்பத்தில் உள்ள பி.எல்.ஏ திடலில் நடைபெறுகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் இல்லத் திருமண விழாவை திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைப்பது வழக்கம்.

ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழாவை முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நடத்தி வைக்க உள்ளார். திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையேற்க உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த திருமண நிகழ்வுக்குச் செல்லவில்லை.

முதல்வர் ஸ்டாலின் தென்மாவட்ட விசிட்: இன்று மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக தென் மண்டல பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் மீனவ சங்க மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அன்றே அவர் சென்னைக்கு திரும்ப உள்ளார்.

Why CM Stalin did not participate in wedding of Thanga Tamil Selvans daughter in Theni?

ஆகஸ்ட் 20ஆம் தேதி, திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழா நடைபெறுகிறது. ஆனால், ஆகஸ்ட் 18ஆம் தேதியே ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் மதுரை வந்து விமானம் மூலம் சென்னை திரும்ப இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மதுரை வட்டாரத்தில் 3 நாட்கள் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் நடைபெற இருக்கும் தேனி வடக்கு மா.செ தங்க தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழாவிற்கு செல்லாதது ஏன் என்ற கேள்வி திமுகவினரிடையே எழுந்துள்ளது.

உளவுத்துறை வார்னிங்: ஆனால், முதல்வர் இந்த திருமண நிகழ்விற்குச் செல்வதை தவிர்த்ததன் பின்னணியில் இருப்பது உளவுத்துறை எச்சரிக்கை தான் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர். தேனி மாவட்டம் கம்பத்தில் தங்க தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா நடைபெறும் அதே நாளில் தான் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்களைத் திரட்ட அதிமுகவினர் முழுவேகத்தில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாநாட்டையொட்டி அன்று அதிகாலை முதலே மதுரைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் வருவார்கள். அன்று மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தேனி சென்றால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், அதனால், இந்த பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.

எதிர் சேவலை இறக்கும் ஸ்டாலின்: இதை கவனத்தில் கொண்டே, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டால் அதிமுகவினர் இதை அரசியல் ஆக்குவார்கள், அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டாம் என்று கருதி முதல்வர் இந்த பயணத்தை தவிர்த்துள்ளாராம். இதை தங்க தமிழ்செல்வனிடம் முதல்வர் ஸ்டாலினே போனில் அழைத்து தெரிவித்துவிட்டாராம். அதே சமயம், முதலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இந்த திருமணத்திற்கு தனது சார்பாக அனுப்பி வைக்க நினைத்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் அந்த முடிவையும் மாற்றிக்கொண்டாராம்.

Why CM Stalin did not participate in wedding of Thanga Tamil Selvans daughter in Theni?

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கிறார். நீட் விவகாரத்தில் ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டி அதிமுக நடத்தும் மாநாடு பற்றிய பேச்சுகளை டைவர்ட் செய்ய, அன்றைய தேதியையே திமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கும் டிக் அடித்துள்ளார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றால் இந்தப் போராட்டம் அதிக கவனம் பெறும் என்பதால் தான் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட சீனியர்களை தேனிக்கு அனுப்புகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+