அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு
தெஹ்ரான்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்போதைய சூழல் மிகவும் சிக்கலானது. குறிப்பாக, பிப்ரவரி 2026-ல் தொடங்கிய நேரடி ராணுவ மோதல்கள் ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடு ஈரானை எளிதில் "வெல்ல" முடியாததற்கு புவியியல் மற்றும் நிலப்பரப்பு தான் காரணம் ஆகும்.. ஈரானுக்கு மிகப்பெரிய பலமே இயற்கை தந்த ஹார்முஸ் ஜலசந்தி தான். அதேபோல் ஈரான் தனியாகப் போரிடவில்லை. லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிக்கள் எனப் பல ஆயுதக் குழுக்கள் ஈரான் பக்கம் உள்ளன. சற்று விரிவாக பார்க்கலாம்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது (மார்ச்-ஏப்ரல் 2026) நடந்து வரும் " ராணுவ நடவடிக்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில், அமெரிக்கா ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை (அயதுல்லா அலி காமேனி உட்பட) இலக்கு வைத்து அழித்த போதிலும், ஏன் இன்னும் "வெற்றி" பெற முடியவில்லை என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

ஈரான் ஒரு மிகப்பெரிய நாடு. பிரான்ஸ் அல்லது ஜெர்மனியை விட பல மடங்கு பெரியதாக உள்ளது. ஈரானின் நிலப்பரப்பு முழுவதும் மலைகளும், கரடுமுரடான மலைத்தொடர்களும் நிறைந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சந்தித்த அதே சவாலை விட இது பெரியது. ஒரு நாட்டை வான்வழித் தாக்குதல் மூலம் சேதப்படுத்த முடியும். ஆனால் அதை முழுமையாகக் கட்டுப்படுத்த லட்சக்கணக்கான தரைப்படை வீரர்கள் தேவை. அதற்கு அமெரிக்கா தற்போது தயாராக இல்லை. அதற்கு காரணம் ஈரானின் நிலப்பரப்பு அமைத்துள்ள முறை தான்.
அமெரிக்காவிடம் நவீன விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இருக்கிறது. ஆனால் ஈரான் "சமச்சீரற்ற போர்முறை"யில் வல்லமை பெற்றது. எப்படி என்றால் அமெரிக்கா இஸ்ரேலின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வெறும் 50 ஆயிரம் மதிப்புள்ள ட்ரோன்களை வைத்து ஈரான் காலி செய்கிறது. இது அமெரிக்காவிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவிடம் நவீன விமானப்படை இருக்கலாம், ஆனால் ஈரானிடம் அதை எதிர்கொள்ள விலை குறைந்த, ஆனால் சக்திவாய்ந்த ஆயுத்தங்கள் உள்ளன. ஈரான் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மலைப்பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளது. அமெரிக்கா எவ்வளவு அழித்தாலும், அவை மீண்டும் மீண்டும் ஏவப்படுகின்றன.
லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்கள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் (இஸ்ரேல், சவுதி) தளங்களையும் ஈரான் தாக்கி வருகிறது. இது போரை ஈரான் எல்லைக்கு வெளியே பரவச் செய்கிறது. ஈரான் தனியாகப் போரிடவில்லை. லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிக்கள் எனப் பல ஆயுதக் குழுக்கள் ஈரான் பக்கம் உள்ளன. அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், இந்த அமைப்புகள் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்குகின்றன. இது போரை ஒரு இடத்துடன் நிறுத்தாமல் பிராந்தியம் முழுவதும் பரவச் செய்கிறது.
அமெரிக்கா மத்திய கிழக்கில் பிஸியாக இருப்பதை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. ரஷ்யா ஈரானுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை மறைமுகமாக வழங்குகிறது. அமெரிக்கா ஒரு போரைத் தொடங்கும், ஆனால் அதை வெற்றிகரமாக முடிக்கத் தெரியாது" என்ற பிம்பம் (ஈராக், ஆப்கானிஸ்தான் அனுபவங்களால்) பல நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் மற்றொரு நீண்ட காலப் போரை விரும்புவதில்லை. அதிகப்படியான உயிரிழப்புகள் அல்லது பொருளாதாரச் சரிவு ஏற்பட்டால், அது அமெரிக்காவின் தற்போதைய ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஈரான் இதை நன்கு அறிந்து, போரை நீண்ட காலம் இழுத்தடிக்க முயல்கிறது.
ஏன் அமெரிக்காவால் ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க முடியவில்லை? ஈரான் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கடலில் விதைத்துள்ளது. இவற்றை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து அகற்றுவது மிகக் கடினமான மற்றும் நேரமெடுக்கும் பணியாக இருக்கிறது. அதேபோல் ஈரானின் சிறிய, வேகமான படகுகள் ஏவுகணைகளுடன் வந்து பெரிய போர்க்கப்பல்களை அச்சுறுத்துகின்றன. இது "தேனீக்கள் தாக்குதல்" போன்றதாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஹார்முஸ் நீரிணை வெறும் 21 மைல் அகலமே கொண்டது. ஈரானின் கடற்கரையிலிருந்து சாதாரண பீரங்கிகள் மூலமே கப்பல்களைத் தாக்க முடியும் என்பதால், கப்பல்கள் உள்ளே நுழைய அச்சப்படுகின்றன.
தெளிவாக சொல்வது என்றால், ஈரான் போரில் நேரடி வெற்றியை விட, உலகப் பொருளாதாரத்தை முடக்குவதையே தனது உத்தியாகக் கொண்டுள்ளது.நீரிணை மூடப்பட்டதால் உலக எண்ணெய் விநியோகத்தில் 20% முடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவிற்குள்ளேயே மக்கள் மத்தியில் போருக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. டிரம்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஐரோப்பிய நாடுகள் கைகொடுக்கவில்லை.. இதனால் விரக்தியில் உள்ளார். இது அமெரிக்காவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஈரான் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்ற பிடிவாதமும், ஒரு தரைப் போர் (Ground Invasion) நடத்தினால் லட்சக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பார்கள் என்ற பயமும் அமெரிக்காவைக் கட்டிப் போட்டிருக்கிறது.
ஈரான் இப்போது "Tehran's Tollbooth" என்று சுங்கச்சாவடி முறையை பின்பற்றி, தனக்கு விருப்பமான நாடுகளின் (சீனா, இந்தியா போன்றவை) கப்பல்களை மட்டும் அனுமதிக்கிறது. இது அமெரிக்காவின் தார்மீக அதிகாரத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா இதுவரை சந்திக்காத சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் குதித்தது. ஆனால் இஸ்ரேலுக்காகவே ஈரானை அமெரிக்கா தாக்கியது.இஸ்ரேல் எடுத்த முடிவு தான் உலகத்தையே பொருளாதார ரீதியாக முடக்கி உள்ளது. ஏனெனில் ஈரான் போரில் வெற்றி பெறுவதை விட உலகத்தின் பொருளாதாரத்தை முடக்கும் ஹார்முஸில் சிக்கலை உண்டாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications