இந்த சீசனோடு.. உறவு முறிந்தது.. முக்கிய வீரரை அப்படியே வீட்டிற்கு அனுப்பும் சிஎஸ்கே? என்ன நடந்தது?
சென்னை: சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ஆடும் அம்பதி ராயுடு அடுத்த சீசனில் ஆடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் வேறு ஒரு வீரர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ஆடும் பல வீரர்கள் அடுத்த சீசனில் ஆடுவதற்கு வாய்ப்பு குறைவு. உதாரணமாக இந்த சீசனில் அணியில் சிறப்பாக ஆடி வரும் ரஹானே அடுத்த சீசனில் இருப்பாரா என்பது சந்தேகம்தான்.

அதேபோல் சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய வீரர் என்றால் அது பென் ஸ்டோக்ஸ்தான். அவரும் அடுத்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடுவாரா இல்லையா என்ற சந்தேகம் இல்லை.
அடிக்கடி காயம் ஏற்படுவதால்.. எதிர்காலத்தை மனதில் வைத்து அவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு எடுக்கும் வாய்ப்பும் உள்ளது. இன்னொரு பக்கம் தோனியின் கடைசி சீசனாக இது இருக்குமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
இதெல்லாம் பெரும்பாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வேறு ஒரு விஷயம் உள்ளது.
அதன்படி சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ஆடும் அம்பதி ராயுடு அடுத்த சீசனில் ஆடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் வேறு ஒரு வீரர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 7 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.
அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.
அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அவரிடம் வேகம் இல்லை. பீல்டிங்கும் சரியாக செய்வது இல்லை. பேட்டிங்கிற்காக மட்டுமே அவரை உள்ளே கொண்டு வந்தனர். ஆனால் அதுவும் சரியாக செய்வது இல்லை. மற்ற எந்த அணியிலும் மிடில் ஆர்டரில் இப்படி ஒரு வீரர் இருந்ததே இல்லை.
இதனால் பெரும்பாலும் இந்த சீசன்தான் அம்பதி ராயுடுவிற்கு கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications