"பாயசம்".. வார்த்தையை விட்ட விஜய்.. தவெக மாநாடு பேச்சில் அந்த ஒரு விஷயம் பெரிய சர்ச்சையானது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு பேச்சில்.. ஒரு குறிப்பிட்ட விஷயம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவரின் பேச்சு சிலரை கவர்ந்து இருந்தாலும்.. சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும்.. ஒரு விஷயம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

நேற்று தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ஒரு குழந்தை தனக்கு முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அத கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

அரசியலில் வளவளவென்று பேச கூடாது. புள்ளி விவர புலியாக புள்ளி விவரங்களை அடுக்கி உள்ளோம். இங்க நீ வேற நான் வேற இல்ல, இது இந்தியா...ஏற்கனவே இருக்க அரசியல்வாதிகள் மாறி அதிகமா பேசி டைம் வேஸ்ட் பண்ணப் போறதில்லை அரசியல்வாதிகளை பற்றியும் அதிகமாக பேச போறது இல்லை. இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிய பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்லை.. அதுக்காக கண்ண மூடிட்டு இருக்கவும் மாட்டோம்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்ஷன் கபடதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது. பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக.

யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள், என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு: இதில் நடிகர் விஜயின் பாசிசம் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன. பின்வரும் விமர்சனங்கள் இதில் வைக்கப்படுகின்றன.

விஜய் பல விஷயங்களை பேசி இருக்கலாம்.. திமுகவை விமர்சிக்கலாம். ஆனால் பாசிசத்திற்கு எதிரான எந்த ஒரு கட்சியையும்.. பாயசம் என்று சொல்லி கிண்டல் செய்ய கூடாது.

விஜயின் அரசியல் முதிர்ச்சியின்மையை இது காட்டுகிறது. பாசிசத்தை எதிர்ப்பவர்களை பாயசம் என்று சொல்லி கிண்டல் செய்வது சரியாக இருக்காது. அவர் பலரின் போராட்டங்களை மலிவு படுத்துகிறார்.

பல மாநிலங்களில் மத மோதல் இருக்கிறது. பல மாநிலங்களில் புல்டோசர் அரசியல் இருக்கிறது. அப்படி இருக்க இதை எல்லாம் வைத்து கிண்டலாக பேசுவது விமர்சனம் ஆகி உள்ளது.

ஜாதி, மதம், மொழித் திணிப்பு மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்புகள் தொடர்பான உண்மையான போராட்டங்களை அவர் நிராகரித்திருப்பது போல பேசி இருப்பது தவறு என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+