ஸ்டாலின் பேச்சை கேட்டு.. அப்படியே வந்து அதிமுக எம்எல்ஏ.. காலையிலேயே சம்பவம்.. ஷாக்கான எடப்பாடி?
சென்னை: இன்று அதிகாலை அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் செய்த சம்பவம் ஒன்று அதிமுகவினர் இடையிலும், எடப்பாடி பழனிசாமி இடையிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

இந்த திட்டத்திற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஒரு கோரிக்கை வைத்தார். அதன்படி அதிமுக எம்எல்ஏக்களும் தங்கள் மாவட்டங்களில் இந்த திட்டங்களை விரிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு, அதை தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் இந்த நிகழ்வில் இன்று கலந்து கொள்ளவில்லை. ஆனால் அதிமுகவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் இந்த நிகழ்வில் இன்று கலந்துகொண்டார். அதிமுகவின் டாப் லீடர்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
எடப்பாடி உத்தரவு: இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என்று அதிமுக மேலிடம் கட்சி எம்எல்ஏக்களுக்கு ரகசியமாக சொல்லி இருக்கிறதாம். ஆனால் அந்த உத்தரவை மீறி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உசிலம்பட்டியில் தொடங்கி வைத்தார் அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன். இவர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அவரின் அணியில்தான் இருக்கிறாராம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன்
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) August 25, 2023
#TNBreakfastScheme pic.twitter.com/Cw4FWVqPqR
இதன் காரணமாகவே ஸ்டாலின் பேச்சை கேட்டு அவர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது.
முதல்வரின் திட்டம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

"நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்" என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications