போட்டியிட மாட்டேன்! அண்ணாமலை சொன்ன வார்த்தை! முருகனும் பின்வாங்கிட்டாரே! பாஜக முடிவிற்கு என்ன காரணம்
சென்னை: பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது .
தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.
பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும். மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
சாதகமான சூழ்நிலை: சில கருத்து கணிப்புகள் கூட தற்போது பாஜகவிற்கு சாதகமாக வர தொடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது .
நீலகிரி போட்டியில்லை: அதன்படி நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை கோவை: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.
என்ன காரணம்: அண்ணாமலையின் இந்த முடிவிற்கு என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில்.. பெரும்பாலும்.. மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில்.. மத்திய உளவுத்துறை சார்பாக மத்திய பாஜக அரசுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கும்.
தேர்தல் தொடர்பாக எங்கே நிற்கலாம், யார் நிற்கலாம், எங்கே நிற்க கூடாது என்று ரிப்போர்ட் சென்று இருக்கும். அந்த ரிப்போர்ட் காரணமாக தேர்தலில் நிற்க மாட்டேன் என்ற முடிவை அண்ணாமலை , எல் முருகன் எடுத்து இருக்கலாம்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications