"ஸ்பெஷல் பாராட்டு".. திமுக பற்றி கேட்டதும்.. டோனை மாற்றிய அண்ணாமலை! நோட் பண்ணீங்களா? காரணம் இருக்கு!
சென்னை: எப்போதும் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை இந்த முறை பாராட்டி பேசி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டி பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக சென்னை முழுக்க மாஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான துவக்க விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட்
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கு பின் பிரதமர் மோடியை ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுக பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்று நான் முதல்வரை பாராட்டுகிறேன். கையில் மைக் இருக்கிறது என்பதற்காக நான் எது வேண்டுமானாலும் சொல்ல கூடாது. இன்று முதல்வரை நான் மனதார பாராட்டுகிறேன்.

அண்ணாமலை பாராட்டு
இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக, நம்முடைய கலாச்சாரத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த நிகழ்ச்சியை செம்மையாக பயன்படுத்திக்கொண்டார். தமிழ்நாட்டின் 5000 ஆண்டு பழமையை எடுத்து உரைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. இதற்காக திமுகவிற்கு, பாஜகவிற்கு தனிப்பட்ட வகையில் நன்றி. ஆனால் அதற்காக திமுக பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை அதை பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

திமுக அரசு
பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி. பாஜக ஒரு கொள்கை ரீதியான கட்சி என்பது உங்களுக்கே தெரியும். கொள்கையை நாங்கள் மாற்ற மாட்டோம். போன முறை பிரதமர் வந்த போது முதல்வர் கொஞ்சம் பெரிய மனதோடு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினேன். இந்த முறை முதல்வர் முதல்வராக நடந்து கொண்டதற்கு தனிப்பட்ட வகையில் பாராட்டுக்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாராட்டு ஏன்?
எப்போதும் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை இந்த முறை பாராட்டி பேசி இருக்கிறார். இவரின் பாராட்டிற்கு பின் வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்த போது இதே நேரு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசியதாக எழுந்தது. கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்த போது அதில் ஸ்கோர் செய்தது என்னவோ முதல்வர் ஸ்டாலின்தான். பிரதமர் மோடி இருந்த மேடையிலேயே வைத்து ஒன்றியம் ஒன்றியம் என்று பல முறை பேசினார். அதேபோல் திராவிடம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பல முறை பேசினார்.

விமர்சனம்
முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசியதை பார்த்தது பாஜக தலைவர் அண்ணாமலையும் கொதித்து போய் கடுமையான விமர்சனங்களை மறுநாள் வைத்து இருந்தார். முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் தவறு என்று அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார். ஆனால் இந்த முறை பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் மேடையில் நெருக்கமாக இருந்தார். இவர்கள் நட்பாக சிறிது பேசிக்கொண்டு இருந்தனர். எதிர் எதிர் துருவங்கள் போல இவர்கள் செயல்படவில்லை.
Recommended Video

நட்பு
அதோடு முதல்வர் ஸ்டாலினும் மேடையில் அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த நிலையில்தான் முதல்வரின் செயல்பட்டால் பாஜக தரப்பு மனம் குளிர்ந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. மேடையில் காணப்பட்ட அரசியல் நாகரீகம் காரணமாக அண்ணாமலை இப்படி அரசை புகழும் வகையில் டோனை மாற்றி பேசி இருக்கிறார். ஆனால் நேற்று நடந்த இதே செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக அமைச்சர்களை அண்ணாமலை விமர்சித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications