அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்?
சென்னை: தமிழக அரசியலில் "என் மண், என் மக்கள்" என்று வேட்டி கட்டி வலம் வந்து பாஜகவை பிரபலப்படுத்த நினைத்த அண்ணாமலையின் பெயர், இன்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் இல்லாததுதான் ஒட்டுமொத்த பாஜகவின் 'டாப் ஆஃப் தி டவுன்' டாக். "அண்ணாமலை போட்டியிடுவார்... சட்டமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜிப்பார்" என்றெல்லாம் காத்திருந்த அவரின் தம்பிகளுக்கு இது கொஞ்சம் இடிதான்.

திடீர் 'பூத் ஏஜென்ட்' அவதாரம் ஏன்?
நேற்று வரை "நான் வேட்பாளர் கிடையாது, வெறும் பூத் ஏஜென்ட் தான்" என்று அண்ணாமலை சொன்னதை பலரும் அரசியல் விளையாட்டு என்றுதான் நினைத்தார்கள். ஆனால், இன்று பட்டியல் வந்த பிறகுதான் புரிகிறது, அது விளையாட்டு அல்ல... உண்மை என்பது.
ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏகப்பட்ட இழுபறி. அதிமுக ஒதுக்கிய தொகுதிகள் பலவற்றில் வெற்றி வாய்ப்பு மங்கலாக இருப்பதாக ஒரு ரிப்போர்ட் டெல்லிக்கு பறந்ததாம். "தோற்றுப்போனால் தலைமைப் பதவிக்கு ஆபத்து வரும்" என்பதை முன்கூட்டியே கணித்துதான், அண்ணாமலை இந்த 'சேஃப் கேம்' ஆடுகிறாரா என்ற முணுமுணுப்பு கமலாலயத்தின் டீக்கடை பெஞ்சுகளில் கேட்கிறது.
டெல்லி கொடுத்த 'டாஸ்க்'!
அண்ணாமலை போட்டியிடாததற்கு பின்னால் டெல்லியின் பெரிய ஸ்கெட்ச் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஸ்டார் கேம்பைனர்: ஒரு தொகுதியில் நின்றால் அங்கேயே முடங்க வேண்டியிருக்கும். இப்போது 234 தொகுதிகளுக்கும் பறந்து பறந்து பிரசாரம் செய்ய அண்ணாமலைக்கு 'ஃப்ரீ ஹேண்ட்' கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது அவ்வளவு நம்பும்படியாக இல்லை என்கிறார்கள் .
நேஷனல் என்ட்ரி: சட்டமன்றத் தேர்தலில் கட்சியை கணிசமான வாக்குகளுடன் கரையேற்றினால், அவருக்கு டெல்லியில் ஒரு முக்கிய 'பொறுப்பு' காத்திருப்பதாக அமித் ஷா தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாம்.
குட் புக்கில் இல்லை: இன்னொரு பக்கம் மோடி, அமித் ஷா குட்புக்கில் அண்ணாமலை இல்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.
ஏமாற்றத்தில் 'அண்ணாமலை ஆர்மி'!
ஆனாலும், "அண்ணாமலை நின்றால் அந்தத் தொகுதியில் ஒரு பெரிய தாக்கம் இருக்கும், தொண்டர்கள் உற்சாகமடைவார்கள்" என்று நினைத்த அவரின் அடிமட்டத் தொண்டர்கள் இப்போது செம அப்செட். "வானதி சீனிவாசன், தமிழிசை, எல்.முருகன் என சீனியர்களுக்கு சீட் கொடுத்துவிட்டு, சிஸ்டத்தை மாற்ற வந்த சிங்கத்தை ஏன் ஓரங்கட்டினீர்கள்?" என்பதுதான் அவர்களின் குமுறல்.
அண்ணாமலை அடுத்து என்ன செய்வார் என்பதே இப்பொது கேள்வி. அவர் இப்போதைக்கு அமைதியாக இருப்பார்.. தேர்தல் முடியும் வரை பேச மாட்டார். முடிவுகளை பொறுத்தே அவர் எதுவாக இருந்தாலும் பேசுவார். அதுவரை அவர் பாஜக கூட்டணியை சிதைக்கும் எதையும் செய்யமாட்டார் என்கிறார்களா.
அடுத்த மூவ் என்ன?
பூத் ஏஜென்டாகப் பணியாற்றி "நான் சாதாரணத் தொண்டன்" என சென்டிமென்ட் கார்டு வீசப்போகிறாரா? அல்லது பிரசாரத்தில் ஆளுங்கட்சியையும், முன்னாள் கூட்டாளியையும் ஒரே நேரத்தில் கதறவிடப்போகிறாரா?
அண்ணாமலையின் இந்த 'ஓய்வு' என்பது ஒரு பெரிய பாய்ச்சலுக்கானதுதான். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, அவர் தமிழக பாஜகவில் நீடிப்பாரா அல்லது டெல்லி 'விமானத்தில்' ஏறுவாரா என்பதுதான் இப்போதைய சஸ்பென்ஸ்!
-
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications