எங்களை யாராலும் இனி சேர்க்க முடியாது.. ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு பிரிவு ஏன்? வெளியான கூட்டு அறிக்கை
சென்னை: ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்? என்பது பற்றி சாய்ரா பானு - ஏஆர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் மூலம் கூட்டு அறிக்கையாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். ‛ஆஸ்கர்' விருது வென்ற இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார்.

ஏஆர் ரஹ்மானின் மனைவி பெயர் சாய்ரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு கதிஷா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர் வந்தனா மற்றும் அசோசியேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
" சாயிரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா மற்றும் அவரது அசோசியேட்ஸ் சார்பில் இந்த கூட்டு அறிக்கை வெளியிடுகிறது. திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.
இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications