Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன்.. அண்ணாமலை அப்படி சொன்னது ஏன்? ஆஹா காரணமே வேறயாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற அண்ணாமலையின் திடீர் அறிவிப்பால் பாஜகவில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. ஏன்? ஏன்? என்று திடீர் கேள்விகள் பாஜகவில் அலை அடிக்கத் தொடங்கிவிட்டன.

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

 Why did BJP Annamalai say that he wont contest in the Lok Sabha election amid his Yatra?

இதுவரை 5 நாள் யாத்திரை முடிந்துவிட்டது. அண்ணாமலை தற்போது சிவகங்கையில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். நடைப்பயணத்திற்கு இடையே சிவகங்கையில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன் .

கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

அண்ணாமலை கோவையில் போட்டியிடுவார், அவரின் இந்த நடைபயணம் 2024 தேர்தலை மனதில் வைத்துதான் என்று விவாதங்கள் எல்லாம் நடந்து வந்தன. இந்த நிலையில் திடீரென அப்படி எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்து இருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

விவாதம்: கட்சி நிர்வாகிகள் பலரும், மாநில நிர்வாகிகள் தொடர்புகொண்டு, தலைவர் ஏன் இப்படி திடீரென்று அறிவித்திருக்கிறார்? ஏதேனும் ஸ்பெசல் ரீசன் இருக்கிறதா? என்றெல்லாம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். நாமும் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர்கள், ''அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு பரபரப்புக்காக அப்படி பேசியிருக்கிறார். இதற்கு முன்பு கூடத்தான், அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை கட்சி தலைமை எடுத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என எச்சரிக்கை செய்தார்.

அவர் அப்படி பேசிய ஓரிரு நாளிலேயே, அதிமுக கூட்டணியை உறுதிசெய்தது கட்சி மேலிடம். அதற்கு அத்தாட்சியாக எடப்பாடி உள்ளிட்ட சீனியர் குழுவினரையும் அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்துப் பேசினார் அமித் ஷா. கூட்டணி உறுதியானது. அதற்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா என்ன? அதனால் சில பரபரப்புக்காக ஏதேனும் குண்டை வீசுவார் அண்ணாமலை. அதனால் சீரியஸ் காட்டவேண்டாம்.

அதே சமயம், நடைப்பயணம் அவரும் கட்சித் தலைமையும் எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பாகவோ மக்களிடம் எழுச்சியையோ உருவாக்கவில்லை. இதனை மத்திய உளவுத்துறை அனுப்பும் தினசரி ரிப்போர்ட்டிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறது மேலிடம். குறிப்பாக, நடைப்பயணத்தின் கான்செப்ட்டையே அவர் கெடுத்துக் கொண்டிருப்பதாக ஒரு ரிப்போர்ட் சொல்கிறதாம். இது குறித்து டெல்லியிலிருந்து அவரிடம் சில விசயங்களை விசாரித்திருக்கிறார்கள்.

அந்த கடுப்பில்தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று பேசியிருக்கக்கூடும். மற்றப்படி தேர்தல் நெருக்கத்தில் நீ போட்டியிட வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டால் அவரால் மறுக்க முடியுமா? ஆக, 5 நாள் நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத சூழலில் விரக்தியில் அப்படி பேசுகிறார். மற்றபடி முக்கியத்துவம் இல்லை''' என்று சொல்கின்றனர் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+