அக்கா வானதி, அண்ணே எச்.ராஜா.. அண்ணாமலை பேசுகையில்.. "வெளியே போங்க".. வந்த உத்தரவு.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அண்ணாமலை சந்தித்தார்.

Why did BJP chief Annamalai ask journalists to go out of BJP meeting hall for 45 minutes?

இதை தொடர்ந்து இன்று பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதில் பேசிய அண்ணாமலை., இந்த நிகழ்வில் கூடி இருக்கும் அக்கா வானதி சீனிவாசன், அண்ணன் எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இங்கு வந்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் என் வரவேற்புகள். அண்ணன் இணை அமைச்சர் எல் முருகன் நிகழ்விற்கு வருவதாக இருந்தது. ஆனால் ஆளுநர் மாளிகையில் வள்ளலார் நிகழ்வில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பேசுகிறார்.

அதனால் அவர் அங்கே சென்றுவிட்டார். என் பேச்சை நான் மன்னிப்போடு தொடங்குகிறேன். மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். காரணம்.. நாம் இந்த கூட்டத்தை கடந்த 3ம் தேதி கூட்ட வேண்டியது. ஆனால் நான் டெல்லியில் இருந்ததால் அங்கே சந்திப்புகளை நடத்தியதால் இந்த உயர் மட்ட குழு கூட்டத்தை நடத்த முடியவில்லை. இங்கே கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது என்று கூறினார்.

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென பேச்சை நிறுத்தி.. பத்திரிக்கை நண்பர்களே கொஞ்சம் வெளியே போங்க. கொஞ்சம் வெளியே இருங்கள். நாங்கள் இங்கே ஆலோசனை செய்கிறோம். ஆலோசனைகளை முடித்துவிட்டு முடிவுகளை அறிவிப்போம். வெளியே எங்கள் முடிவுகளை அறிக்கையாகவெளியிடுவோம் .

அவர்கள் வெளியேற வசதி கொடுங்கள். வெளியே அவர்கள் அமர இடம் கொடுங்கள். அவர்கள் அமர்ந்து கொள்ள நான் வந்த போது இடம் இல்லை. இப்போது இடம் கொடுங்கள். ஒரு 45 நிமிடம் வெளியே இருங்கள். அறிக்கையாக நாங்கள் முடிவுகளை அறிவிக்கிறோம் என்று அண்ணாமலை கூறினார். இதை தொடர்ந்து உள்ளே அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இவர்களின் ஆலோசனை முறிவு குறித்து சில நிமிடங்கள் நீண்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனை முடிவு என்ன?: இந்த ஆலோசனையின் முடிவில், கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். கூட்டணியில் இருந்து போனால் போகட்டும், அது அவர்களது விருப்பம். கூட்டணி விவகாரம் குறித்து பாஜக தலைமை தான் முடிவு எடுக்கும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனி டெல்லி முடிவு எடுக்கட்டும். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும். பாஜகவை வலிமையடைய செய்வதே என்னுடைய நோக்கம். 2024 தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி;. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக
கூட்டணி வெல்லும். 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும், கட்சியை பூத் வாரியாக வலுப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+