என்னை மாத்திடுங்க.. பொன்முடியே போய் சொல்ல.. ஸ்டாலின் எடுத்த "நடவடிக்கை".. குலுங்கிய கோட்டை
சென்னை: அமைச்சரவை மாற்றங்களில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருப்பது சீனியர் அமைச்சர் பொன்முடியின் இலாகா பறிப்புதான். உயர்கல்வியிலிருந்து தன்னை விடுவித்து, மிகச் சாதாரணத் துறையை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று முதல்வரிடம், பொன்முடியே கோரிக்கை வைத்ததாகவும், அதன்படி அவரது இலாகா மாற்றப்பட்டது என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில், அவரது மாற்றத்தில் பல வில்லங்கங்கள் இருக்கிறது என்கிறார்கள் உயர்கல்வித்துறையினர்.
இது குறித்து கோட்டையில் விசாரித்தபோது, "ஆளுநர் ரவிக்கும் அமைச்சர் பொன்முடிக்கும் பல்கலைக்கழக விவகாரங்களில் ஏழாம் பொறுத்தமாகவே இருந்து வந்தன. முந்தைய சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழ்த்தியபோது எழுந்த பிரச்சனையில், அவரை ஒருமையில் விமர்சித்தார் பொன்முடி. அப்போதே இவர் யார் ? இவரது பின்னணி என்ன? என தெரிந்து கொண்டதுடன், பொன்முடி மீது கோபம் கொண்டிருந்தார் ரவி.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளை நியமிப்பதில் பொன்முடி தடையாக இருப்பதில் அவருக்கும் ஆளுநருக்குமான பணிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் பொன்முடியின் மீது அதிர்ப்தியடைந்தார் கவர்னர். மேற்கண்ட விவகாரங்களில் தனது அதிர்ப்தியை டெல்லிக்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்திருக்கிறார் ஆளுநர்.
மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தன்னை சந்தித்தபோது, பொன்முடிக்கு எதிரான தனது அதிர்த்தியை வெளிப்படுத்தியதுடன், உயர்கல்வி துறையை அவரிடமிருந்து மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். அதாவது பொன்முடி மாற்றப்பட வேண்டும் .
பொன்முடி மாற்றப்பட வேண்டும் : மேலும், உயர்கல்வித்துறையில் துணை வேந்தர்களும், உயரதிகாரிகளும் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரால் நிறைய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அந்த வகையில், பொன்முடிக்கு எதிராக உயரதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடமும், துணை வேந்தர்கள் கவர்னர் ரவியிடமும் பொன்முடியின் அதிகார மோதலை தெரியப்படுத் தியிருக்கிறார்கள். அதனால், உயர்கல்வித்துறையில் இருந்து அவர் மாற்றப்பட வேண்டும் என்பது ஆளுநரின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. அதனை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் " என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
மேலும் விசாரித்தபோது, "பொன்முடியின் உதவியாளர்களில் முக்கியமானவராக இருந்த ஒருவர். உயர்கல்வித் துறையின் நிழல் அமைச்சராக அதிகாரம் செலுத்தி வந்தார். இதற்கு காரணம், முதல்வர் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சொந்தக்காரர் இவர். அதனால், இவரது அதிகாரம் உயர்கல்வித் துறையில் கொடி கட்டிப்பறந்தது. இதன் மூலம், பொன்முடிக்கு அதிகாரிகள் பயப்பட்டதைக் காட்டிலும் இவருக்குத்தான் அதிகம் பயந்தனர்.
பொன்முடியின் பெயரைச் சொல்லி ஏகத்துக்கும் சம்பாதித்தவர் இந்த உதவியாளராம்! ஒரு கட்டத்தில் உதவியாளர் தில்லுமுல்லுகளை அறிந்து, அவருக்கு கல்தா கொடுத்தார் பொன்முடி. இதனால் ஆத்திரமடைந்த அந்த உதவியாளர் பொன்முடிக்கு எதிராக, துறையில் பொன்முடி என்னென்ன காரியம் சாதித்தார், அவரது மனைவியும் மகனும் எப்படியெல்லாம் தலையிட்டார்கள் என்றெல்லாம் முதல்வரிடன் குடும்ப உறுப்பினரிடம் போட்டுக் கொடுத்ததுடன், பொன்முடி கேரக்டரை இழிவுபடுத்தியும் சொல்லியிருக்கிறார்.
அதிருப்தி: ஏற்கனவே, கவர்னரின் அதிர்ப்தி இருந்து வந்த நிலையில், உதவியாளர் போட்டுக் கொடுத்தலும் சேர்ந்ததால் பொன்முடி மீது முதல்வர் குடும்பத்துக்கு கோபம் இருந்தது. இதனையடுத்து, பொன்முடிக்கே அந்த நபரை மீண்டும் உதவியாளராக நியமித்து கோட்டையில் இருந்து ஆர்டர் ரிலீஸாக, அதனை மதிக்கவில்லை பொன்முடி. இப்படிப்பட்ட காரணங்கள் தான் அவரது இலாகா பறிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன " என்கிறார்கள் பல்கலைக்கழகத் தரப்பினர்.
ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் இணக்கமாகவும், கான்ட்ராவெர்சியை உருவாக்காமலும் இருப்பதற்காகவே முதன் முறை அமைச்சராகும் கோவி.செழியனுக்கு உயர்கல்வி ஒதுக்கப்பட்டுள்ளது
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications