3 பேருக்கும் "மஞ்சள்".. மோடி, முர்முவிற்கு ஸ்பெஷல் "போக்கே" தந்த ஸ்டாலின்.. இதன் அர்த்தம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி சென்று இருந்த முதல்வர் ஸ்டாலின், பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மூவருக்கும் மஞ்சள் நிற பூக்கள் அடங்கிய போக்கேதான் கொடுத்தார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவசர பயணமாக முதல்நாள் இரவு டெல்லி சென்றார். முதல்நாள் இரவு டெல்லியில் ஓய்வு எடுத்த ஸ்டாலின் மறுநாள் காலை 10.30 மணிக்கு துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்தார்.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் பின்னணி Live

    அதன்பின் 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

    பின்னர் மாலை பிரதமர் மோடியை சந்தித்து 30 நிமிடம் ஆலோசனை செய்தார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

    மோடி

    மோடி

    பிரதமர் மோடியிடம் நீட், காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள் பற்றியும் இவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் குடியரசுத் தலைவரிடமும் முதல்வர் ஸ்டாலின் இதே கோரிக்கையை வைத்துள்ளார். இருப்பினும் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் பேசினோம். அதே சமயம் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    மஞ்சள் பூக்கள்

    மஞ்சள் பூக்கள்

    இந்த மூன்று சந்திப்புகளிலும் முதல்வர் ஸ்டாலின் மஞ்சள் நிற பூக்கள் அடங்கிய போக்கேதான் கொடுத்தார். துணை குடியரசுத் தலைவருக்கு முதலில் மஞ்சள் போக்கே கொடுத்தார். பின்னர் குடியரசுத் தலைவர் முர்முவிற்கு மஞ்சள் போக்கே கொடுத்தார். அதன்பின் பின்னர் மாலையில் பிரதமர் மோடியை சந்தித்தார். அவருக்கும் மஞ்சள் போக்கேதான் கொடுத்தார். இப்படி மூவருக்கும் ஒரே நிறத்தில் பூக்கள் அடங்கிய பொக்கேவை அவர் வழங்கியது கவனம் பெற்றது.

    நேர்த்தியான பூக்கள்

    நேர்த்தியான பூக்கள்

    இந்த பூக்கள் மிகவும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு, மிகவும் சிறப்பாக போக்கே வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இதன் அர்த்தம் என்ன? ஏன் மஞ்சள் போக்கேவை கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்களும் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். மஞ்சள் போக்கே என்பது நட்பை குறிப்பது ஆகும். நட்பு, நல் உறவு ஆகியவற்றை குறிப்பது.

    அர்த்தம் என்ன

    அர்த்தம் என்ன


    அதேபோல் இது மகிழ்ச்சியை பரப்புவது, சந்தோசமாக இருப்பது, பாசிட்டிவ்வாக இருப்பது போன்ற விஷயங்களை உணர்த்தும் கலர் ஆகும். அதேபோல் மாயன் நாகரீகத்தின்படி மஞ்சள் என்பது செழிப்பின் நிறம் ஆகும். கிரேக்க நாகரீகத்தின்படி இது சூரியனை குறிப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்க கலாச்சாரத்திலும் மஞ்சள் போக்கே சூரியனுடன் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது. புத்துணர்வு, நல்ல நட்பு ஆகியவற்றை குறிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த மஞ்சள் பொக்கேவை வழங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+