ஜெ. மாதிரி இல்லை.. ஸ்டாலினையே தூண்டிவிட்டுட்டாங்க.. இப்போ பாருங்க பதிலடியை.. பறந்து போன "பைல்ஸ்"!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பாஜகவினரும் ஆளுநர் ஆர். என் ரவியும் தூண்டிவிட்டுவிட்டார்கள், அதனால் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார் என்று மூத்த பத்திரிக்கையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.
ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதைதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

பேட்டி
இந்த சர்ச்சை தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், சட்டசபையில் நடந்த நிகழ்வு ஒரு ஷாக்கிங் சம்பவம். தமிழ்நாடு அரசியலில் இப்படி நடந்ததே இல்லை. ஒரு பக்கம் ஆளுநரை சிலர் பாராட்டுகிறார். ஒரு பக்கம் முதல்வரை சிலர் பாராட்டுகிறார்கள். எனக்கு படம் பார்த்தது போல இருந்தது. ஒரு டிராமா பார்த்தது போல இருந்தது. ஆனால் இந்த சம்பவத்தால் மக்களுக்கு என்ன நடக்க போகிறது? மக்களுக்கு என்ன நலன் கிடைக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது? இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநருக்கு எந்த பவரும் கிடையாது. அவரால் ஒரு ரேஷன் பிரச்னையை கூட தீர்க்க முடியாது.

கோடீஸ்வரன்
ஒருவேளை கவர்னர்தான் எல்லாமே என்று வைத்துக்கொள்வோம். கவர்னர்தான் எல்லாமே என்றால் பாஜக ஏன் தேர்தலில் நிற்கிறது. கவர்னர் என்பது நியமன பதவி. அதற்கு பெரிய அதிகாரம் இல்லை. ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் அளித்த உரையை மாற்றி பேசி இருக்கிறார். ஆன்லைன் ரம்மி விவகாரத்திலும் இப்படித்தான் வரையறையை மீறி செயல்பட்டார். ஆளுநருக்கும் - அரசியல் கட்சியினருக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். அண்ணாமலை, வானதி பேசுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஆளுநர் இப்படி எல்லாம் பேச கூடாது. மக்கள் நலனைத்தான் ஆளுநர் பார்க்க வேண்டும்.

ஆளுநர்
ஆளுநர் அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் முதல்வர்? ஏன் அமைச்சர் எல்லாம்? இதை சிலர் சப்போர்ட் செய்தும் பேசுகிறார்கள். இதில் திமுக பக்கமும் பிரச்சனை இருக்கிறது. திமுகவை எதிர்க்க ஆள் இல்லை. திமுக ஆட்சியில் இருக்கும் கட்சி. அவர்களை யாராவது எதிர்த்துதான் ஆக வேண்டும். கவர்னர் இதை எதிர்த்து கேட்காமல், மத்திய அரசிடம் புகார் அளிக்கலாம். ஆனால் அவரே இறங்கி அரசுக்கு எதிராக பேச முடியாது. அரசுக்கு எதிராக அவர் மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அவர் அரசின் கோப்புகளை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.

பைல்ஸ்
அவருக்கு சில பைல்ஸ் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அவர் இதை எல்லாம் ஒரு பக்கம் செய்கிறார். இன்னொரு பக்கம் அண்ணா மீது இவருக்கு என்ன கோபம்? அண்ணா பெயரை ஒதுக்க வேண்டிய அவசியம் இவருக்கு என்ன? தமிழ்நாட்டை கட்டி எழுப்பிய அண்ணாவை இவர் ஏன் புறக்கணிக்க வேண்டும்? பெரியாரை கூட விட்டுவிடுங்கள்.. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள் அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்றவர்கள் பெயரை இவர் ஏன் சொல்லவில்லை. காமராஜர் போன்ற தலைவரின் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொல்வது என்ன? அது என்ன குசும்பா? இதை எப்படி எடுத்துக்கொள்வது.

உரையில் தகவல்
ஆளுநர் உரையில் இருக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களின் பெயர்கள் இருப்பதை இவர் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆளுநர் மரபை மீறி செயல்படுகிறார். சட்டசபை மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். ஆளுநர் தேசிய கீதம் ஒலிக்கப்படும் முன்பே அவர் வெளியேறுகிறார் என்றால் அது மரபை மீறியதுதானே? சட்டசபைக்கு உள்ளே சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்திற்குத்தான் இந்தியாவிலேயே உச்ச நீதிமன்ற அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்றமே ஆளுநர் விவகாரத்தில் ஒரு சில இடங்களில் தலையிட மாட்டார்கள்.

ஜனநாயகம்
ஏனென்றால் இது ஜனநாயகம். அப்படி இருக்கும் போது சபாநாயகர் முடிவு எடுக்கலாம். ஆளுநர் உரை என்பது அவருக்கு கொடுக்கப்படும் உரை. அதை அவர் படிக்க வேண்டும். அதுதான் வேலை. அவர் தனக்கு கொடுத்த மரியாதையை கெடுத்துக்கொண்டார். அவர் மரபை பின்பற்றவில்லை. பதிலடியாக அவர் பேசிய வார்த்தைகளை நீக்கிவிட்டனர். சும்மா இருந்த முதல்வரை தூண்டிவிட்டுவிட்டார். ஜெயலலிதா இருந்தால் கதையே வேறு. ஜெயலலிதா போல இவர் கோபம் அடைய மாட்டார். அப்படிப்பட்ட ஸ்டாலினையே தூண்டிவிட்டார்கள். அதனால் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக வாதம் வைக்கிறது. அதனால் அமைதி பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டில் தினம் தினம் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறதா? அண்ணாமலை இதை பேசலாம்.. ஆளுநர் பேசலாமா? ஆளுநர் சட்ட ஒழுங்கு சரியில்லை என்கிறார் என்றால் ஆட்சியை கலைப்பாரா? சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் அவரால் ஆட்சியை கலைக்கும் துணிவு இருக்கிறதா? அந்த திராணி ஆளுநருக்கு இருக்கிறதா? அதை செய்யாமல் வெறுமனே பூச்சாண்டி காட்டலாமா? என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications