ஸ்டாலின் பேச்சை கவனிச்சீங்களா? அதிமுக பெயரை கூட சொல்லலையே.. அப்போ இனிமே பாஜக மட்டும் தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் அதிமுக என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் தவிர்த்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். வி.சி.க, தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய, எங்கள் உயிரே, எங்கள் கலங்கரை விளக்கமே உங்கள் 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். நீங்கள் எப்போதும் உடன் இருக்கும் உடன்பிறப்புகளோடுதான் இந்த விழாவை கொண்டாடுகிறோம். கலைஞர் கருணாநிதி நம்மை கண்காணித்துக்கொண்டு இருந்தார்.

Why did CM Stalin not say the word AIADMK in Karunanidhi centenary public meeting?

எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை கருணாநிதி கவனித்துக் கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். திமுக தோன்றிய வடசென்னை பகுதியில் நூற்றாண்டை கொண்டாடுவது சிறப்பான விஷயம்.

நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை என்று சொன்னவர் கருணாநிதி.. அதனால் மக்கள் மத்தியில் அவர் கவனிக்கப்பட்டார். கருணாநிதியின் ஆட்சியே சாமானியர்களின் ஆட்சி தான்.

சாமியார்களுக்காக அவர் கடைசி வரை வாழ்ந்தார். அவர் போன பின்பும் அவர் கொண்டு வந்த திட்டங்கள் கவனம் பெற்றன. திமுக ஆட்சியே ஏழை எளிய பாட்டாளிகளின் ஆட்சி தான்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். பாசிசத்திற்கு எதிரான தேர்தல் இது. இதில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும்.

யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல் இது. யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வெற்றிபெற கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து இந்தியாவை காக்க ஒன்று சேர வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் பேசினார்.

இந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய சில விஷயங்கள் கவனம் பெற்றனர். ஸ்டாலின் பேசுகையில் அதிமுக என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் தவிர்த்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக இல்லை: அவர் தனது உரையில் எங்குமே அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை. அதிமுக என்ற வார்த்தையை கூட அவர் பயன்படுத்தவில்லை. அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது போல அவரின் பேச்சு இருந்தது.

Why did CM Stalin not say the word AIADMK in Karunanidhi centenary public meeting?

வி.சி.க, தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களும் இந்த நிகழ்வில் பேசினார்கள். அவர்களும் எங்குமே அதிமுகவை பற்றி பேசவில்லை.

ஸ்டாலின் இதில் பாஜக, ஆளுநர் ரவி ஆகியோரை விமர்சனம் செய்தார். பாஜகவின் கொள்கைகளை விமர்சனம் செய்தார். ஆனால் எந்த இடத்திலும் அதிமுகவை பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை. அதனால் எங்கே தமிழ்நாட்டு அரசியல் திமுக vs பாஜக என்று மாறுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கியமாக நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை எதிர்க்கும் தேர்தல் என்பதால் அதிமுகவை ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+