இவருக்கு எல்லாம் சிலை வைக்கணும்.. சிஎஸ்கே அணியில் "அந்த" வீரரை நோட் பண்ணீங்களா.. தங்கம் சார்!
சென்னை: சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
சிஎஸ்கே அணி 2023 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது. குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதற்கு அடுத்து ஆடிய லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது.

அதிலும் நேற்று மும்பை அணி பேட்டிங் பவர் பிளேவில் அடித்து நொறுக்கினாலும்.. அதன்பின் ஸ்பின் சூழலில் மண்டியிட்டு மடிந்தது.
நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வென்றது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்ட்னர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்ட்னர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
நேற்று போட்டியில் சிஎஸ்கே வீரர் சான்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில்தான் சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.
அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.
அதே சமயம் அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது நம்பிக்கை கொடுத்துள்ளார். பிராவோ இல்லாத நிலையில், சான்ட்னருக்கு தற்போது தொடர் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில்தான் இவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சிஎஸ்கே அணியில் பெஞ்சில் இருந்தாலும் அவர்களின் மனசு கோணாத வகையில் தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கும். அந்த வகையில்தான் சான்ட்னருக்கும் அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்து வருகிறது. இதுவே அவரும் புகார் அளிக்காமல், விமர்சனங்களை வைக்காமல் இருக்க முக்கிய காரணம் ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications