Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தருமபுரியில் அதிக வாக்குகள் பதிவானது ஏன்? காரணமே வேறயாமே.. சௌமியா அன்புமணிக்கு சிக்கலோ சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மபுரியில் தொடர்ந்து வாக்கு சதவிகிதம் அதிகரிக்க காரணம் வன்னியர்கள். வன்னியர்கள் அங்கே அதிகம் உள்ளனர். அப்படி இருக்க வன்னியர்கள் வாக்குகள் விழுந்தால் வன்னியர்கள் இல்லாத வாக்குகள் அதிகம் விழும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவு: கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

Why did Dharmapuri record higher voter percentage in Tamil nadu Lok Sabha Elections 2024

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு: மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.

முதலில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக என்று கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதி நம்பரில் வாக்குப்பதிவு அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தர்மபுரியில் தொடர்ந்து வாக்கு சதவிகிதம் அதிகரிக்க காரணம் வன்னியர்கள். வன்னியர்கள் அங்கே அதிகம் உள்ளனர். அப்படி இருக்க வன்னியர்கள் வாக்குகள் விழுந்தால் வன்னியர்கள் இல்லாத வாக்குகள் அதிகம் விழும். வன்னியர்கள் வாக்குகள் விழுகிறது என்பதால் அதை முறி அடிக்க வன்னியர்கள் அல்லாதவர்கள் அதிகம் வாக்களிப்பார்கள்.

வன்னியர்கள் ஒன்று திரள்வதால் நான் வன்னியர்கள் அங்கே ஒன்று திரள்கிறார்கள். இதனால்தான் அங்கே வாக்குகள் அதிகம் பதிவாகிறது. தேர்தல் முடிவுகளும் அதிகம் மாறுகிறது. கடந்த முறை லோக்சபா தேர்தலில் திமுக ஜெயிக்க இப்படி நான் வன்னியர்களும் வாக்களித்ததே காரணம். நான் சொல்கிறேன். இந்த முறை பாமகவிற்கு வாக்குகள் கன்சாலிடேட் ஆகவில்லை.

அதன் காரணமாகவே பாமக அங்கே ஜெயிக்காது. நான் சொல்கிறேன். அங்கே சௌமியா அன்புமணி ஜெயிக்க மாட்டார். அவர் தோல்வி அடைவார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் நடக்க போகிறது. அங்கே இந்த முறை வன்னியர்கள் வாக்குகள் விழுந்ததால் வன்னியர்கள் இல்லாத வாக்குகள் அதிகம் . வன்னியர்கள் வாக்குகள் விழுகிறது என்பதால் அதை முறி அடிக்க வன்னியர்கள் அல்லாதவர்கள் அதிகம் வாக்களிப்பார்கள்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சௌமியா தோல்வி அடைய அதிக காரணம் உள்ளது. பொதுவாக வன்னியர்கள் அதிகம் வருகிறார்கள் என்பதால் தேர்தல் நாளில் மற்ற ஜாதியினர் இதை பார்த்து போய் அதிகமாக வாக்களிப்பார்கள். இதுவே சௌமியாவிற்கு எதிராக செல்லும். இந்த வாக்கு சதவிகிதமே சௌமியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+