தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் வழங்கியதன் பின்னணியில் இருக்கும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு நேற்று 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக அதிக இடங்களை தேமுதிக பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காலம் காலமாக இருக்கும் விசிகவிற்கு 8 தொகுதிகளும், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த முறையை விட தலா ஒரு தொகுதிகளை குறைத்து 5 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அதேபோல் மதிமுகவிற்கு 2 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தொகுதியினறி திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் கூட்டணிக்குள் வந்த உடனேயே தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கியதோடு, இப்போது 10 தொகுதிகள் வழங்கி இருப்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவினரே கவலை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தேமுதிக 0.43 சதவீத ஓட்டுகளை தான் பெற்றது. இது பிற திமுக கூட்டணி கட்சிகளை விடவும் குறைவாகும். இதனால் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் தேமுதிகவிற்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கப்பட்டு இருப்பதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
வன்னியர் ஓட்டு விவகாரம்
அதாவது வடமாநிலங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் வன்னியர் சமுதாய மக்களின் ஓட்டுகள் தேவை. ஆனால் பாமக இரண்டு அணியாக பிரிந்துள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் உள்ளார். ராமதாஸ் அணியும், சசிகலாவுடன் கூட்டணி வைத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனும் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தேமுதிகவிற்கு வடமாவட்டங்களில் வன்னியர்களிடம் ஓரளவு செல்வாக்கு இருந்த வரலாறு இருக்கிறது. இதற்கு உதாரணமாக கடந்த 2011 சட்டசபை தேர்தலை எடுத்து கொள்ளலாம். அந்த தேர்தலில் அதிமுகவுடன், விஜயகாந்த் கூட்டணி வைத்தார். மொத்தம் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இதில் 29 தொகுதிகளில் தேமுதிக வென்றது. இதில் பெரும்பான்மையான தொகுதிகள் வடமாவட்டங்களை சேர்ந்தது. இன்னும் கூற வேண்டும் என்றால் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளாகும். இதனால் தேமுதிகவால் கூட்டணிக்குள் வன்னியர் ஓட்டுகளை கொண்டு வர முடியும் என்று திமுக நினைக்கிறது.
2011ல் வென்ற தொகுதியின் பின்னணி அதாவது 2011ல் தேமுதிக கும்மிடிப்பூண்டி, திருத்தணி, எழும்பூர் (தனி),
ஆலந்தூர், செங்கல்பட்டு, செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), சோலிங்கர், ஆம்பூர், போளூர், ஆரணி, செங்கம் (தனி), ரிஷிவந்தியம் (விஜயகாந்த் வென்ற தொகுதி), திருக்கோவிலூர், தர்மபுரி, மேட்டூர், சேலம் (வடக்கு), கெங்கவல்லி (தனி), நாமக்கல், திருச்செங்கோடு, செந்தாமங்கலம் (தனி), ஈரோடு (கிழக்கு), சூலூர், மயிலாடுதுறை ,பேராவூரணி , திருவெறும்பூர், மதுரை (சென்ட்ரல்), திருப்பரங்குன்றம், ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் தேமுதிக வென்றது.
இதில் பெரும்பாலான தொகுதிகள் வன்னியர்கள் நிறைந்த தொகுதிகளாக உள்ளன. ஜாதி சார்ந்த அரசியலை விரும்பாத வன்னியர்கள் மத்தியில் விஜயகாந்துக்கு நல்ல செல்வாக்கு இருந்த நிலையில் தேமுதிகவின் ஓட்டுகளை அள்ளியது. இதனை உணர்ந்தே விஜயகாந்த் வன்னியர்கள் அதிகம் இருக்கும் விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் களமிறங்கி வெற்றியும் பெற்றார்.
குறைந்த ஓட்டு வித்தியாசம்
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அப்படியென்றால் ஏன் இந்த தொகுதிகளில் 2016, 2021 தேர்தல்களில் தேமுதிக வெற்றி பெறவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அதன் பின்னணியை பார்த்தால் தேமுதிக 2016ல் மக்கள் நல கூட்டணியுடன் நின்றது. 2021ல் தேமுதிக டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. திமுக - அதிமுகவுடன் சேரவில்லை. இதன்மூலம் கணிசமான அளவில் ஓட்டுகளை பெற முடிவில்லை.
ஆனால் இப்போது திமுகவுடன் தேமுதிக சேர்ந்து இருப்பது வடமாநிலங்களில் வன்னியர்களின் ஓட்டுகளை பல தொகுதிகளில் திமுகவுக்கு பெற்று கொடுக்கும். சட்டசபை தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைவாக தான் இருக்கும். அப்படி இருக்கும்போது வடமாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெல்ல தேமுதிகவின் ஓட்டுகள் உதவும் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனுதாப அலை - நாயுடு 'பேக்டர்'
அதேபோல் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதனால் தேமுதிக மீது ஒரு தரப்பினருக்கு அனுதாபம் இருக்கும் நிலையில் அதுவும் ஓட்டாக மாறலாம். அதேபோல் பிரேமலதா விஜயகாந்ந்த நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இந்த சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் உள்ளனர்.
இதனால் அங்கும் பிரேமலதாவின் 'பேக்டர்' திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை வன்னியர் வாக்குகளை திமுக கூட்டணிக்கு தேமுதிக கொண்டு வராவிட்டாலும் கூட 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான அவரது கருத்தால் வன்னியர் தவிர பிற சமுதாய ஓட்டுகளை விஜயகாந்தின் அனுதாபத்தின் வழியாக கூட்டணிக்கு அறுவடை செய்யலாம் என்பது திமுகவின் கணக்காக உள்ளது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications