Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரம் பார்த்து.. அதிரடி காட்டிய ஆ.ராசா.. அப்படியே உற்றுப்பார்த்த டெல்லி.. பாஜகவிற்கு எகிறிய பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி ஆ. ராசா நேற்று கொடுத்த பேட்டி ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பாஜகவை கடுமையாக தாக்கி அவர் பேட்டி அளித்து இருந்தார்.

ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

Why did DMK MP A Raja gets angry on Odisha train accident and accuses BJP?

என்ன சொன்னார்? : இந்த விபத்து தொடர்பாக பாஜகவை விமர்சனம் செய்த திமுக எம்பி ராசா, ஒடிசா ரயில் விபத்தில் திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை; ஆனால் விபத்துக்கு காரணம் தனிமனித தவறா அல்லது தொழில்நுட்பக்கோளாறா என இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை; இவ்வளவு தொழில்நுட்பங்கள் உள்ளபோதும் நடந்துள்ள இந்த விபத்துக்கு பொறுப்பேற்கப்போவது யார்?"

வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்க அமைச்சரே செல்லலாம்; ஆனால், அனைத்து இடங்களுக்கும் சென்று விளம்பரம் தேடிக்கொள்ளும் பிரதமர் மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் பிரதமர் மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை.

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்? ஆனால் மம்தா பானர்ஜி நேருக்கு நேராக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்; அமைச்சர் ஊமையாக இருக்கிறார், இந்த கோர விபத்து நடந்ததற்கு யார் காரணம். சிஸ்டமா? தனி மனிதரா? ரயில்வே அமைச்சர் ஊமையாக நிற்கிறார்.

இந்த விபத்திற்கு காரணம் சிஸ்டம் என்றால் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வது யார்? தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சின்ன விஷயம் நடந்தால் அதை பெரிதாக்கும் சிலர் இதில் அமைதியாக இருப்பது ஏன்?

கவாச் பாதுகாப்பிலும் பிரதமர் மோடி ஏன் கவனம் செலுத்தவில்லை என்று ஆ. ராசா எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் இந்த பேட்டி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக வடமாவட்டங்களில் பாஜகவிற்கு பிரஷர் கொடுக்கும் விதமாக இந்த பேட்டி மாறி உள்ளது.

Why did DMK MP A Raja gets angry on Odisha train accident and accuses BJP?

அமைதி: கடந்த சில நாட்களாக பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் அமைதியாக இருந்த ஆ. ராசா இந்த முறை அளித்துள்ள பேட்டி பெரிய புயலை கிளப்பி உள்ளது. ஆ. ராசாவிற்கு எதிராக டெல்லி பிரஷர் போட்டு வரும் நிலையில்தான் அவர் இந்த பேட்டியை கொடுத்துள்ளார்.

ஆ ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 - 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வாங்கப்பட்டதும் புகார் வைத்துள்ளது.

தனது நண்பர்கள், உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு பக்கம் தலையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2ஜி வழக்கிலும் விசாரணை சூடு பிடித்துள்ளது. இதில், ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.

மேலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது,.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+