செந்தில் பாலாஜியிடம் 5 நாட்களுக்கு 600 கேள்விகள்.. கரூர் புதிய வீடு குறித்து அமலாக்கத் துறை விசாரணை
சென்னை: அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடிக்கு எடுத்த நிலையில் திடீரென மருத்துவர்கள் குழு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் முதல் சூடு பிடித்தது. இதில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் அவருக்கு இரு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதன் கீழ் மாற்றப்பட்டார்.
அங்கு அவர் சிறிது நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தன் கணவரை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தொடர்ந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கு இரு தரப்பு விசாரணையும் ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
சுமார் 5 நாட்கள் அனுமதி அளித்த நிலையில் நேற்று சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத துறையினர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 5 நாட்கள், அதாவது வரும் 12 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு பிரேக் விட்டு பிரேக் விட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர்களை அமலாக்கத் துறை அழைத்து இருந்தது. இதையடுத்து அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
நாளொன்றுக்கு 50 கேள்விகள் வீதம் விசாரணையை அமலாக்கத் துறை நடத்துகிறது. அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கியில் வரவு வைக்கப்பட்ட தொகை, புதிதாக கட்டப்படும் வீடு, அதற்கான பணம் குறித்தெல்லாம் அமலாக்கத் துறை கேள்வி எழுப்பி வருகிறது. அதில் 60 சொத்து ஆவணங்கள் குறித்து அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications