தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?
சென்னை: இன்று 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதி குறித்து பேசியது கவனம் பெற்றது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் - முக்கிய தேதிகள்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 30
மனு தாக்கல் முடிவு - ஏப்ரல் 6
வேட்புமனு பரிசீலனை - ஏப். 07
வேட்புமனு திரும்பப்பெற - ஏப். 09
புதுச்சேரி முக்கிய தேதிகள் புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுச்சேரி மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 16
மனு தாக்கல் முடிவு - மார்ச் 23
வேட்புமனு பரிசீலனை - மார்ச் 24
வேட்புமனு திரும்பப்பெற - மார்ச் 26
வருசநாடு மலைப்பகுதி
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசுகையில், அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விபரங்கள் பகிரப்படும். வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை; செல்போன்கள் வைக்க தனி ஏற்பாடு செய்யப்படும்.
1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும்,.
5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்று அறிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு திட்டங்கள், தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றும் பணிகளில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!











Click it and Unblock the Notifications