2 ஏழை விவசாயிகள் செய்த தவறு என்ன? அமலாக்கத்துறை சாதி குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது ஏன்? முழு விவரம்
சென்னை: விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து என்ன நடந்தது? விவசாயிகள் இதில் குறி வைக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கான எளிமையான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்குத்தான் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குணசேகரனுக்கு எதிராக இவர்கள் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கு இடையேதான் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அமலாக்கத்துறை சம்மன்: சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராகும்படி, , விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது . ஜூன் மாதம் அனுப்பப்பட்ட இந்த சம்மன் சர்ச்சையாக காரணம்.. அந்த சம்மனில் வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் உடன் ஜாதி பெயரும் இருந்தது.
வங்கி கணக்கில் 500 ரூபாய் கூட இல்லாத விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது. உணவிற்கே கஷ்டப்படும் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது பெரிய பிரச்சனை ஆனது. அப்போது ஜாதி பெயர் கூறி சம்மன் அனுப்பப்பட்டதுதான் இத்தனை நாட்கள் கழித்து இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட காரணம். சரி இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து என்ன நடந்தது? விவசாயிகள் இதில் குறி வைக்கப்பட்டது ஏன்? என்று பார்க்கலாம்.
1. இரண்டு ஏழை விவசாயிகள் கண்ணையன் (வயது 72), கிருஷ்ணன் (67) சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாய நிலம் வைத்துள்ளனர். 6.5 ஏக்கர் விவசாய நிலம் இவர்களிடம் உள்ள நிலையில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ரித்தேஷ்குமார் சார்பாக இவர்களுக்கு சம்மன் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அனுப்பப்பட்டு உள்ளது.
2, இந்த 2 விவசாயிகள் காட்டு எருமையை கொன்றதாக அதற்கு முன் சேலம் வனத்துறை அதிகாரிகள் பதிவு செய்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும்.. அதிகாரபூர்வமாக அமலாக்கத்துறை சம்மனில் என்ன வழக்கிற்காக சம்மன் அனுப்பப்பட்டது என்று கூறப்படவில்லை.
3. தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்று விட்டதாக வனத்துறையினர் வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதில் அவர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்படவில்லை என்று ஆத்தூர் கோர்ட் கூறிவிட்டது. இவர்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்க.. குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விவகாரத்தில் எப்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப முடியும்.
4. ஆனால் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில்.. விவசாயிகள் மீதான சம்மனுக்கு என்ன காரணம் என்று கூறவில்லை. காட்டு எருமை விவகாரம் பற்றி கூறவில்லை என்றால்.. வெறும் 500 ரூபாய் இருக்கும் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?
5. இதில் இன்னொரு வாதம் வைக்கப்படுகிறது.. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதே.. எங்கள் மீதான காட்டு விலங்குகளை கொன்று விட்டதாக வனத்துறையினர் வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது என்று விவசாயிகள் ஏன் வனத்துறையிடம் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி பார்த்தாலும்.. சம்மனில் என்ன வழக்கு என்றே கூறப்படாத போது.. விவசாயிகள் எப்படி வனத்துறை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று சொல்ல முடியும். எதற்கு சம்மன் என்றே தெரியாத போது வனத்துறை வழக்கு பற்றி விவசாயிகள் எப்படி பேச முடியும்.
6. அமலாக்கத்துறை சம்மன் ஒருவேளை வனத்துறை வழக்கு வைத்துதான் போடப்பட்டது என்றால்.. அதை ஏன் சம்மனில் குறிப்பிடவில்லை.
7. அமலாக்கத்துறை சம்மன் ஜாதி பெயருடன் இருந்தது ஏன்? அதுவும் கூட வனத்துறை வழக்கில் இருந்த ஜாதி பெயரின் அடிப்படையில் வந்தது என்று வைத்துக்கொள்வோம். அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாது என்பதால்.. அவர்கள் அப்படியே ஜாதி பெயரை பயன்படுத்திவிட்டனர் என்று வைத்துக்கொண்டாலும்.. ஜாதி பெயரை கவனிக்க தெரிந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு.. அந்த வழக்கு முடிந்துவிட்டது என்பது எப்படி தெரியாமல் போகும்.
8. அதிலும் வனத்துறை வழக்கில் ஜாதி பெயருடன் "இனம்" என்ற தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் அமலாக்கத்துறை அந்த வார்த்தையை சம்மனில் பயன்படுத்தவில்லை. தமிழ் தெரியாதவர்கள் ஏன் இனம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.. அதை பயன்படுத்தாதவர்கள் ஜாதி பெயரையும் தவிர்த்து இருக்கலாமே.
9. இந்த ஜாதி பெயரை பார்க்க தெரிந்த அமலாக்கத்துறைக்கு, வனத்துறை வழக்கை வைத்து சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு.. அந்த வழக்கு முடிந்துவிட்டது என்பதை எப்படி கவனிக்க தெரியாமல் போனது.
10. கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கேட்ட பா.ஜ.க நிர்வாகி குணசேகரனுக்கும் இந்த பிரச்சனைக்கும் தொடர்பு உள்ளதா?
11. சரி வனத்துறை வழக்கு இது இல்லை என்றால்.. உண்மை சம்மன் அனுப்பப்பட்டது எதற்காக? ஏழை விவசாயிகள் செய்த தவறு என்ன?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications