12 தாமரை மொட்டுக்களே.. "கைகோர்ப்பு".. திடீரென "அவரை" சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. விழிக்கும் பாஜக
இந்த முறை 12 எம்பி சீட்டுகளையாவது பெற வேண்டும் என்று பாஜக யோசித்து வருகிறதாம்
சென்னை: பாஜக ஒன்று நினைத்தால், அதை தவிடு பொடியாக்கும் விதமாக, அதிமுக தலைமை வேறு ஒன்றை செய்துவிடுகிறது.. அப்படி ஒரு சம்பவம்தான் இப்போதும் நடந்துள்ளது.
2 நாளைக்கு முன்பு, மயிலாடுதுறைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார்.. அங்கே சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரம் ஆதீனத்துடன் எடப்பாடி தனியாக சந்தித்து பேசினார்..
இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாகவும், பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்ததற்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது..

எடப்பாடி சந்திப்பு
இதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடமும் பேசினார்.. "தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் வழிமுறைகளில் நாம் தலையிடக்கூடாது... அதிலும் குறிப்பாக ஆதீன விவகாரங்களில் திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது. சுமார் 500 ஆண்டு காலம் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இப்போது மட்டும் அதை நிறுத்த திமுக அரசு முயற்சி செய்கிறது... யார் தவறு செய்தாலும் சரி அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்" என்றார்.

வாசலில் சாபம்
கோயில் வாசலில் நின்று கொண்டு எடப்பாடி பழனிசாமி இப்படி சாபம் விட்டு வந்தது, திமுகவைதான் என்றாலும், இதனால் அதிர்ந்து போனது பாஜகவும்தான்.. காரணம், சமீபகாலமாகவே, திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறது தமிழக பாஜக.. அதனால்தான், பிரதான எதிர்க்கட்சி செய்ய வேண்டிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.. மற்றொரு பக்கம், அதிமுகவையும் பலவீனப்படுத்தி, மட்டுப்படுத்தி வரும் போக்கும் தொடர்கிறது.

எடப்பாடி பழனிசாமி
திமுகவை சீண்டுவதால்தான், ஆதீனம் விஷயத்திலும் பாஜக மூக்கை நுழைத்துள்ளது.. இந்த விஷயத்தில் திடீரென அதிமுக என்ட்ரி தந்து, நேரடியாகவே ஆதீனத்தை சந்தித்து பேசி அதிர்ச்சியை தந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதுமட்டுமல்ல, கடந்த வாரம் திமுக அமைச்சர்களின் ஊழல்கள் லிஸ்ட்டை அண்ணாமலை செய்தியாளர்களிடம் பகிரங்கப்படுத்தியிருந்தார்.. ஆனால், இதை அதிமுக பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.. இது தொடர்பான செய்தியையும், அந்த கட்சியின் சேனல்களில் பிரதானமாக ஒளிபரப்பப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

டேமேஜ்
திமுக எதிர்க்கட்சியே என்றாலும், அதற்கு எதிராக அரசியல் செய்ய, அதிமுக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே இதன் எண்ணமாக உள்ளது.. இதெல்லாம் பாஜகவுக்கும் தெரியும் என்றாலும், எம்பி தேர்தலை நெருங்கி வருவதால், அதிமுக விஷயத்தில் ஓரளவு அடக்கி வாசிக்கிறதாம்.. பெரிதாக டேமேஜ் செய்யாமல், குறையும் சொல்லாமல், அந்த தலைவர்களை பற்றியும் பொதுவெளியில் பேசாமல், கப்சிப் மோடில் உள்ளதாம்.. இப்போதைக்கு அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் பாஜகவை விமர்சித்தால், அதை பாஜகவின் 2ம் கட்ட தலைவர்கள் மட்டுமே விமர்சித்து வரும் போக்கும் தொடர போகிறதாம்.

ஒர்க் அவுட்
அதுமட்டுமல்ல, எப்படியும் இந்த முறையும் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்பதாலும், குறைந்தது 12 முதல் 14 வரை சீட் வரையாவது தமிழகத்தில் இருந்து பெற்றாக வேண்டும் என்ற கறார் முடிவில் உள்ளதாலும், இப்போதைக்கு அதிமுக மீதான கமுக்க மனப்பான்மையை தொடர்ந்து வருவதாக தெரிகிறது.. அதேசமயம், திமுகவுக்கு எதிராக உள்ள கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ள போவதாக தெரிகிறது.. எனினும், பாஜகவை தமிழகத்தில் மேலெழுந்து விடாமல் திமுகவும், அதிமுகவும் "கைகோர்த்து" தடுத்து கொண்டிருக்கிறதாம்.. ஒர்க் அவுட் ஆகுமா?.. பார்ப்போம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications