இந்த நிலைக்கு தள்ளப்பட்டுட்டாரே! தேவருக்கு மாலை போடும்போதே முகமாறிய எடப்பாடி.. பயமாமே? என்னாச்சு?
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் அமைப்பை காயப்படுத்தி உள்ளார். அந்த சமுதாயத்தை காயப்படுத்தி உள்ளார். அந்த காயம் இப்போதைக்கு ஆற வாய்ப்பு இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு நேற்று சென்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றார். இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக்க.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .

தாக்குதல்: கட்சி தொண்டர்கள் வேனை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு கொடுத்தும் கூட அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொண்டர்கள் ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு அளித்தாலும் கூட எடப்பாடி ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி எடப்பாடி சென்றார். சும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய?அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி; இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஏற்கனவே சொன்ன மாதிரி.. எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் அமைப்பை காயப்படுத்தி உள்ளார். அந்த சமுதாயத்தை காயப்படுத்தி உள்ளார். அந்த காயம் இப்போதைக்கு ஆற வாய்ப்பு இல்லை. அந்த காயம் சரியாக பலகாலம் ஆகலாம். அவரால் மீண்டு வர பலகாலம் ஆகலாம். இப்போதுதான் அவர் காயத்தை ஏற்படுத்தி உள்ளார். இப்போது அவர் குரு பூஜைக்கு சென்றால் இப்படித்தான் நடக்கும்.

முக்குலத்தோர் எடப்பாடி மீது கோபத்தில் உள்ளனர். எடப்பாடி 300 பவுன்சர் உடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். அந்த அளவிற்கு முக்குலத்தோர் எடப்பாடி மீது கோபத்தில் உள்ளனர். அவருக்கு மனசு உறுதி உள்ளது. நமக்கு பிரச்சனை வரும் என்று தோன்றி உள்ளது. அவருக்கு பயம் வந்துள்ளது. அந்த பயம் காரணமாகவே அவர் வேறு வழியின்றி பவுன்சர் உடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வேறு எதுவும் இல்லை.
அவர் போய் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். போய்தான் ஆக வேண்டும். ஆனால் போனால் பாதுகாப்பு இல்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பிரச்சனை வரும். நாம் அசிங்கப்படுத்தப்படலாம் என்று நினைக்கிறார். அந்த அச்சத்தில் பவுன்சர்களை கூட்டிக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே நான் பலமுறை சொன்ன மாதிரி நடந்து உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் அமைப்பை காயப்படுத்தி உள்ளார். அந்த சமுதாயத்தை காயப்படுத்தி உள்ளார். அந்த காயம் இப்போதைக்கு ஆற வாய்ப்பு இல்லை.
அந்த காயத்தை எடப்பாடி ஆற்ற வேண்டும். அது காயும் வரை இதை சரி செய்ய வாய்ப்பு இல்லை. இது எல்லாம் சரியாக கொஞ்சம் டைம் எடுக்கும். இப்போதைக்கு எடப்பாடி முக்குலத்தோர் அமைப்பினரை சரி செய்ய முடியாது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications